2020 இல் ராஜபக்‌ஷ ஒருவர் போட்டியிடுவது எமக்கு சவாலல்ல ..2020 ஆம்  ஆண்டு  ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ   
உட்பட அவரது சகோதரர்கள் போட்டியிடுவது அரசாங்கத்திற்கு ஒரு சவாலல்ல என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் குறிப்பிடுகையில்,
ஆனால் யாரை களமிறக்குவது என்ற விடயத்தில் பொது எதிரணிக்குள் இன்று பாரிய கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றது. 
சிறப்பு  விசேட நீதிமன்றம் ஒரு தரப்பினரை மாத்திரம் குறி வைத்து உருவாக்கப்படவில்லை. இந்த நீதிமன்றம் இரண்டு வருடத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்தால் பலரது குற்றங்கள் மேலும்  பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கும். இன்று எவரும்  தன்னை பாதுகாத்துக்கொள்ள அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிருக்கமாட்டார்கள் என்றார்.

2020 இல் ராஜபக்‌ஷ ஒருவர் போட்டியிடுவது எமக்கு சவாலல்ல .. 2020 இல் ராஜபக்‌ஷ ஒருவர் போட்டியிடுவது எமக்கு சவாலல்ல .. Reviewed by Madawala News on September 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.