இடுப்பில் செருகி வைத்திருந்த சாராய போத்தல் உடைந்து வயிற்றில் குத்தியதில் இளைஞர் பலி.


அம்பலாந்தொட்ட பகுதியில் சாராய போத்தலை இடுப்பில் சொருகிக் கொண்டு சென்ற போது
, போத்தல் உடைந்து வயிற்றில் குத்தியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாந்தொட்ட - மாமடவல, ஹங்கந்வகுர பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சாராய போத்தலை இடுப்பில் சொருகிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், அதனை நிறுத்த முயற்சித்த போது, மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்துள்ளார்.

அப்போது அவர் இடுப்பில் சொருகி இருந்த சாராய போத்தல் உடைந்து வயிற்றில் குத்தியுள்ளது.

இதில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாமடவல ஹெலகொட மேற்கு ரணவிரு மாவத்தையில் வசித்து வந்த 23 வயதான லியனபத்திரனகே தில்ஷான் லக்சித என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இடுப்பில் செருகி வைத்திருந்த சாராய போத்தல் உடைந்து வயிற்றில் குத்தியதில் இளைஞர் பலி. இடுப்பில் செருகி வைத்திருந்த சாராய போத்தல்  உடைந்து வயிற்றில் குத்தியதில் இளைஞர் பலி. Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.