உலக சந்தையில் எண்ணையின் விலை குறையாவிட்டால் அபிவிருத்தி பணத்தால் மக்களுக்கு சலுகைகள் வழங்குவோம்.


 (மொஹொமட்  ஆஸிக்)​
உலக சந்தையில் எண்ணையின் விலை எதிர் வரும் வரவுவெலவுத திட்டம் சமர்ப்பிக்கும்  காலம் வரையிலும்
குறையா விட்டால் அபிவிருத்திகளுக்கு பயன்படுத்த உள்ள பணத்தை  குறைத்து விட்டு மக்களுக்கு சலுகைகள் வழங்க உள்ளதாக விஞ்ஞான, தொழினுட்ப ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழில்பயிற்சி மற்றும் மலைநாநட்டு மரபுரிமைகள்  கலாநிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். 


கண்டியில்  இடம்பெற்றவைபவம் ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில் அவர் ,இதனை தெரிவித்தார்.


இங்கு மேலும் கருத்துதெரிவித்த அவர் இவ்வாறும்தெரிவித்தார்.

எண்ணெய்யின் விலை உலக சந்தையில் அதிகரித்துள்ளதால் எமது நாட்டு மக்களுக்கும் வாழ்க்கைசெலவுதொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் இது ஒரு தற்காலிக் நிலமையை ஆகும். இன்று எண்ணெய் வளம்  உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் பாரிய யுத்த சூழல் கானப்படுகின்றது,

அங்குள்ள என்னையை வௌயேகொண்டு வர வழி இல்லாமல் உள்ளது.இதனால் பாரிய அளவில்  விலை  அதிகரித்துக் கொண்டுசெல்கின்றது.

 வரவுசெலவுத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது இருந்த போதும் அது  எதிர்வரும் நவம்பர் மாதமே  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இக் காலம் வரும்போது உலக சந்தையில் என்னையின விலை குறைந்திருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் அவவாரு குறையா விட்டால் அரச பணத்தை பயன்படுத்தி மக்களுக்கு சில் சலுகைகள்  வழங்கவேண்டி வரலாம்.

  அவ்வாரு வந்தால் அபிவிருத்திப் பணிகள் முடங்கும். ஏனென்றால் அபிவிருத்திக்கு பணன்படுத்த உள்ள பணத்தை பயன் படுத்தியே இவ்வாரான சலுகை கள் வழங்க வேண்டியுள்ளது.

பொது மக்கள் இதனைதெரிந்துகொள்ளவேண்டும் இரண்டையும்செய்ய முடியாது. ஒன்று சலுகைகள் அல்லது அபிவிருத்தி இரண்டையும்செய்ய முடியாது.


ஐனாதிபதி மற்றும்கோட்டாபய ராஜபக்ஷ ஆகயோருக்குகொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம்தொட்பாக கருத்துதெரிவித்த அமைச்சர் சரத் அமுனுகம, இதுதொடர்பாகபொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை ஒரு சில தினங்களில் முடிவடையும் என்றும் அதன பின்  உன்மை வெளி  வரும் என்றும் தெரிவித்தார்.


இலங்கையின் ரூபா வீழ்ச்சியடைவதற்பு பல காரணங்கள் உள்ளது. முதலாவது அமெரிக்காவின் டாலர் சக்தி வாய்ந்த நானயமாக  உறுதியாகி உள்ளது. இதனால் பாதிப்பு எங்களுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள பல நாடுகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 ஏற்றுமதியை கூட்டுவதும் வெளி நாட்டுச் செலாபனியை பாதுகாத்துக் கொள்வதும்  அவசியம் என்றும் தெரிவித்தார்.

2018  09 15 ஆஸிக்
உலக சந்தையில் எண்ணையின் விலை குறையாவிட்டால் அபிவிருத்தி பணத்தால் மக்களுக்கு சலுகைகள் வழங்குவோம். உலக சந்தையில் எண்ணையின் விலை குறையாவிட்டால் அபிவிருத்தி பணத்தால் மக்களுக்கு சலுகைகள் வழங்குவோம். Reviewed by Madawala News on September 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.