பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியான வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அமெரிக்காவின் பாதுகாப்பு கோரல் ?



பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியான  வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அமெரிக்காவில் பாதுகாப்பு கோரியுள்ளதாக ஊடக செய்திகள் வெளியாகிள்ளன.

கடந்த அரசாங்க காலத்தில் 11 தமிழ் வாலிபர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேவி சம்பத் என்ற முன்னாள் அதிகாரியை நாட்டை விட்டு தப்பிச்செல்ல அனுசரனை வழங்கியதாக ரவீந்திர விஜேகுனரத்ன மீது குற்ற சுமத்தப்பட்டுள்ள அதேவேளை அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியிருந்த போதும் அவர் சி ஐ டி விசாரணைகளின் போது ஆஜராகவில்லை.

ஜனாதிபதியின் அனுமதியுடனே அவர் மெக்சிகோ சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை அவர் தற்போது அமெரிக்கவில் பாதுகாப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள 02 வது கடற்படை தளபதி என்பதுடன், இவர் இப்பதவிக்காக நியமிக்கப்பட்ட 07வது பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாவார் .

பாதுகாப்பு படைகளின் அதிகாரி பதவியானது இலங்கை பாதுகாப்பு படைகளிலுள்ள உயர்ந்த பதவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியான வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அமெரிக்காவின் பாதுகாப்பு கோரல் ? பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியான  வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அமெரிக்காவின் பாதுகாப்பு கோரல்  ? Reviewed by Madawala News on September 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.