முஸ்லம்களின் தலைவர் ஹக்கீம்,முஸ்லிம்களுக்கு சார்பாக இந்தியாவிடம் முன்வைத்த வரலாற்று சிறப்புமிக்க கோரிக்கை என்ன தெரியுமா...?
சபாநாயகர் தலைமையில் இந்திய பிரதமரை சந்திக்கச் சென்ற தூதுக்குழுவில்
சென்றவர்கள் வைத்த கோரிக்கைகள்..!

சம்பந்தன் ஐயா...!
பதிய அரசியல்யாப்பை உருவாக்கி எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தர இந்தியா ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அப்படி வழங்கத் தவறினால் எங்களைவிட தீவிரமான போக்கைக் கொண்ட தலைமைகள் உருவாகலாம் என்று எச்சரிக்கை விடுத்ததோடு இன்னும் பல பிரச்சினைகளுக்கும் தீர்வை வேண்டி நின்றார்.

டக்களஸ் தேவானந்தா.... !
13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு  இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியதோடு இன்னும் பல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தருமாறும் இந்திய அரசாங்கத்தை வேண்டியிருந்தார்.

மனோ கணேசன்.... !
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக இன்று இந்த இடத்தில் சம்பந்தனும், டக்ளஸ் தேவானந்தாவும் பல கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவர்களின் கோரிக்கைகளுடன் நானும் உடன் படுகின்றேன் என்று கூறி மலைநாட்டு தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுத்தருமாறு வேண்டி நின்றார்.

தலைவர் ரஹுப் ஹக்கீம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை !

கிழக்கில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை கிழக்கு கரையோரமாக ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்றும். அதேபோல் வடக்குக்குச் செல்லும்  மன்னார், தலைமன்னார் வரையுள்ள ரயில் பாதைகளை புதுப்பித்து தரவேண்டும் என்ற கோரிக்கைதான்.

இதில் கவணிக்கப்படவேண்டியது விடயம் என்னவென்றால் நமது சாணக்கிய தலைவர் ஹக்கீம் அவர்கள் இந்தியாவிடம் முன்வைத்த வரலாற்று முக்கியத்துவமான கோரிக்கைகளில், இலங்கை முஸ்லிம்கள் சம்பந்தமான எந்தக் கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்பதுதான்.  மற்ற இன தலைவர்கள் வைத்த கோரிக்கைகள் தங்களது சமூகம் சார்ந்ததாக இருக்கும்போது.  நமது தலைவர் ஹக்கீம் அவர்கள் வைத்த கோரிக்கையானது சமூகம் சார்ந்ததாக இருந்ததா  என்று பார்த்தால் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

இவர் உண்மையிலேயே முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை உள்ள  தலைவராக இருந்திருந்தால், வடக்கு கிழக்கிலே முஸ்லிம்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் சிலதையாவது இந்திய பிரதமரிடம் எடுத்துக்கூறி  அதற்கான தீர்வை பெற்றுத்தர உதவி செய்யுமாறு கேட்டிருக்கலாம். அல்லது நமது சமூகத்திற்கு இருக்கும் பிரச்சினைகளையாவது அவரிடம் எடுத்துக்கூறியிருக்கலாம். 

குறிப்பாக யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக எடுத்துக்கூறி அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டிருக்கலாம். 
இலங்கை ராணுவத்தால் கைப்பற்றி வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளை மீட்டுத்தர உதவி செய்யுங்கள் என்று கேட்டிருக்கலாம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை அமைத்து தாறுங்கள் என்றாவது கேட்டிருக்கலாம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கான நஷ்டஈடுகளை வழங்க உதவி செய்யுமாறு வேண்டியிருக்கலாம்.   இதனைப்பற்றியெல்லாம் குறிப்பிடாமல் ரயில் பாதை அமைத்து தாருங்கள் என்று கேட்டது சாணக்கியம் என்று கூற முடியுமா?

ஆகவே முஸ்லிம் சமூகம்  இந்த விடயத்தை சிந்தனைக்கு எடுத்து சிந்திக்கவேண்டும். தமிழர்களின் தலைவர்கள் தங்களுடைய  விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் போது. நமது சமூக தலைவர்கள் இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தப்பிரச்சினையும் கிடையாது. அவர்களுக்கு ரயில் பாதைகள் இல்லாததுதான் பிரச்சினை என்று கூறமுடியுமா?

இப்படியானவர்களினால்தான் முஸ்லிம்களுடைய பிரச்சினைகள்  சர்வமயப்படுத்தப்படாமல் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும், இந்திய அரசாங்கம் உதவி செய்கிறதோ இல்லையோ நமது சமூகத்துக்கு இருக்கும் பிரச்சினைகளையாவது எடுத்துக் கூறி அதனை பதிவு செய்திருக்கலாம் அல்லவா?  சபாநாயகரின் முன்னிலையில் எந்தவித பயமுமின்றி தமிழ் தலைவர்கள் இந்திய தலைவர்களிடம் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கேட்கின்றபோது. நமது முஸ்லிம் தலைவர்களும் நமது சமூகத்துக்கு இருக்கின்ற பிரச்சினைகளை எடுத்துக்கூறி தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டால் குற்றமாகுமா? 
இப்படிப்பட்ட இவர்கள் தான் முஸ்லிம்களுக்கு தீர்வை பெற்றுத்தரும் தலைவர்களா.? என்று கேட்கவேண்டும் போல் உள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தில் தொண்டை கிழிய கத்தும் இவர்கள். ஐ.நா. செயலாளர் பாங்கீன் மூன், அதேபோன்று  ரீட்டா, மன்னர் உசைன், போன்றோர் இலங்கை வந்தபோது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை உத்தியோக பூர்வமாக கையளிக்க முடியாமல் ஓடி ஒழித்தவர்கள்தான் நமது தலைவர்கள். இப்படிப்பட்ட குணவியல்புகளைக் கொண்ட இவர்களா நமது சமூகத்துக்கு தீர்வை பெற்றுத்தறப் போகின்றார்கள் என்பதை  நமது சமூகம் புரிந்து கொள்ளாதவரை அவர்கள் காட்டில் மழைதான்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
முஸ்லம்களின் தலைவர் ஹக்கீம்,முஸ்லிம்களுக்கு சார்பாக இந்தியாவிடம் முன்வைத்த வரலாற்று சிறப்புமிக்க கோரிக்கை என்ன தெரியுமா...? முஸ்லம்களின் தலைவர் ஹக்கீம்,முஸ்லிம்களுக்கு சார்பாக இந்தியாவிடம் முன்வைத்த வரலாற்று சிறப்புமிக்க கோரிக்கை என்ன தெரியுமா...? Reviewed by Madawala News on September 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.