மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இராணுவ வீரர்கள்.


கிளிநொச்சி, பூநகரி - கரியாலைநாகபடுவன், கணேஸ்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தை சேர்ந்த
இருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு புரிந்துள்ள நிலையில் குறித்த வீட்டை சேர்ந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர்.

இதன்போது அயல்வீட்டினர் இணைந்து இன்று அதிகாலை குறித்த இரண்டு இராணுவ சிப்பாய்களையும் மடக்கி பிடித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.

எனினும் ஆதாரத்துடன் கூறுமாறு அவர்கள் தொடர்ச்சியாக கூறி வந்த நிலையில் இன்றைய தினம் ஆதாரத்துடன் இரு இராணுவ சிப்பாய்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இராணுவ வீரர்கள். மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இராணுவ வீரர்கள். Reviewed by Madawala News on September 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.