ஒரு மனிதன் மது போதை­யுடன் நண்­பகல் வெயிலில் தொடர்ந்து பல மணி­நேரம் இருக்கும் பொழுது அவர் உட­லியல் ரீதியில் பாதிக்­கப்­ப­டுவார் என்பது விஞ்ஞான ரீதியிலானது...


(இரா­ஜ­துரை ஹஷான்)
"பொது எதி­ர­ணியின் போராட்­டத்தை முறி­ய­டிக்க ஐக்­கிய தேசிய கட்சி பால் பக்­கற்றில்
விஷம் கலந்­த­தாக குற்­றஞ்­சாட்டும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான

 விமல் வீர­வன்ச மற்றும் செஹான் சேம­சிங்­க­விற்கு எதி­ராக சட்ட நடி­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள படும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜ்பூர் ரஹ்மான் தெரி­வித்தார்.

 இக்­குற்­றச்­சாட்டு உண்­மைக்கு புறம்­பா­ன­தாகும் ஆகவே பொலிஸ்மா அதிபர் இவ்­வி­டயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து உண்­மை­யினை பகி­ரங்­கப்­ப­டுத்த வேணடும் அனைத்து வித­மான விசா­ர­னை­க­ளுக்கும் தயார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

 ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இச்­சந்­திப்பில் சட்டம் ஒழுங்கு இரா­ஜாங்க அமைச்சர் நளின் பண்­டார, தொலைத்­தொ­டர்பு அமைச்சர் ஹரின் பெர்­னான்டோ ஆகி­யோரும் கலந்துக் கொண்­டார்கள்.

 பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜ்பூர் ரஹ்மான் மேலும் குறிப்­பி­டு­கையில்.

  விஷம் கலந்த பாலை அருந்­தி­ய­தா­லேயே பொது எதி­ர­ணி­யி­ன­ரது போராட்டம் தோல்­வி­ய­டைந்­தது என்று பொது எதி­ர­ணி­யினர் குறிப்­பி­டு­கின்­றனர். உணவு ஒவ்­வா­மையின் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் 81 பேர் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­பட்­டனர். அவ்­வாறு என்றால் போராட்­டத்தில் 81 பேர் மாத்­தி­ரமா கலந்து கொண்­டனர். போராட்­டத்தை முறி­ய­டிப்­ப­தற்கு அர­சாங்கம் சூழ்ச்­சி­களை பிர­யோ­கிக்க வேண்­டிய எவ்­வித அவ­சி­யமும் எமக்கு கிடை­யாது. போராட்­டத்தை முறி­ய­டிக்க வேண்­டு­மாயின் அனைத்து அதி­கா­ரங்­களும் எம்­பக்கம் காணப்­பட்­டன, அரச அதி­கா­ரத்தை பிர­யோ­கித்து போராட்­டங்­களை முறி­ய­டித்து இருக்­கலாம். சூழ்ச்­சி­களை கையாண்டு போராட்­டங்­களை முறி­ய­டிப்­பதில் கடந்த அர­சாங்­கமே பிர­ப­ல­மாக இருந்­தது

 கடந்த 05ஆம் திகதி நண்­பகல் போராட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன , போராட்டம் ஆரம்­பிக்கும் போதே பலர் போதை தலை­கே­றியே போரா­டி­ய­மை­யினை ஊட­கங்­களில் அவர்கள் வழங்­கிய கருத்­துக்­களின் ஊடாக அறிந்துக் கொள்ள முடிந்­தது. ஒரு மனிதன் மது போதை­யுடன் நன்­பகல் வெயிலில் தொடர்ந்து பல மணி­நேரம் இருக்கும் பொழுது அவர் உட­லியல் ரீதியில் பாதிக்­கப்­ப­டுவார் . இவ்­விஞ்­ஞான தன்­மை­களை எதிர்­த­ரப்­பினர் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். எவ்­வாறு இருப்­பினும் இவர்­க­ளது போராட்டம் படு­தோல்­வி­னையே அடைந்­துள்­ளது. தமது தோல்­வி­யினை மூடி மறைக்­கவே இவர்கள் பாலில் அர­சாங்கம் விஷம் கலந்­த­தாக நாட­கத்­தினை அரங்­கேற்­றுகி;ன்றனர்.

 நிரூ­பிக்க படாத விடயம் தொடர்பில் பொது எதி­ர­ணி­யினர் குற்றம் சாட்­டு­வ­தற்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்டும் இவ்­வி­ட­யத்தில் எவ்­வித விசா­ர­னை­க­ளுக்கும் பூரண ஆத­ரவு வழங்­குவோம் என தெரி­வித்தார்.

 அமைச்சர் ஹரின் பெர்­னான்டோ குறிப்­பி­டு­கையில்.

 ஐக­கிய தேசிய கட்­சியில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜ்பூர் ரஹ்மான் மாத்­திரம் அங்கம் வகிக்­க­வில்லை ஆனால் இவ்­வி­ட­யத்தில் அவரை மாத்­திரம் குற்றம் சாட்­டி­ய­வர்கள் தற்­போது எங்­க­ளையும் சாட்­டு­கின்­றனர். இன­வாத அர­சியல் செய்யும் பொது எதிர்­த­ரப்பின் அர­சி­யல்­வா­திகள் மீண்டும் பெரும்­பாண்மை மக்கள் மத்­தியில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­யினை குற்­ற­வா­ளி­யாக்கி இன­வி­ரோ­தங்­களை தோற்­று­விக்க முயற்­சிக்­கின்­றனர்.

.பொது எதி­ர­ணியின் முக்­கிய தரப்­பி­ன­ரிடம் மஹிந்த போராட்­டத்தின் தலை­மைத்­து­வத்­தினை ஒப்­ப­டைக்­காமல் அர­சியல் அறி­வற்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான நாம­லிடம் கொடுத்­த­மையே அவர் செய்த பாரிய தவ­றாகும். ஆகவே போராட்­டத்தில் கலந்துக் கொண்­ட­வர்­கள இறு­தியில் அநா­த­ர­வாக விடப்பட்ட நிலையில் அவர்களின் பொறுப்பற்ற தன்மையினை உணர்ந்து கொண்டனர்.

 பாலில் விசம் கலந்துள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் எதிர் தரப்பினர் முறையற்ற விதத்திலே செயற்படுகின்றனர். கடந்த அரசாங்கத்தை போன்று கீழ் தரமான அரசியலை நாங்கள் மேற்கொள்ளவில்லை . இதற்கான அனைத்து விசாரனைகளுக்கும நாங்கள் பூரண ஒத்துரைப்பு வழங்குவோம் என தெரிவித்தார்.
ஒரு மனிதன் மது போதை­யுடன் நண்­பகல் வெயிலில் தொடர்ந்து பல மணி­நேரம் இருக்கும் பொழுது அவர் உட­லியல் ரீதியில் பாதிக்­கப்­ப­டுவார் என்பது விஞ்ஞான ரீதியிலானது... ஒரு மனிதன் மது போதை­யுடன் நண்­பகல் வெயிலில் தொடர்ந்து பல மணி­நேரம் இருக்கும் பொழுது அவர் உட­லியல் ரீதியில் பாதிக்­கப்­ப­டுவார் என்பது விஞ்ஞான ரீதியிலானது... Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.