கொழும்பின் பல பகுதிகளிலும் கொலைகளை செய்து வந்த நபர் கைது.


கொழும்பின் பல பகுதிகளிலும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பல கொலைகளைச்
செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கொழும்பு ஜம்பட்டா வீதி மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் செய்து பல கொலைகளைச் செய்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 08 ஆம் திகதி, கடற்கரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, ஜம்பட்டா வீதியில் வைத்து, கணவன் - மனைவி ஆகிய இருவரை சுட்டுக் கொன்றதோடு, மேலும் இருவரை காயப்படுத்தியிருந்த சம்பவத்துடனும், கடந்த ஓகஸ்ட் 03 ஆம் திகதி,  மோதறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துவெல்ல வீதியில் வைத்து நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்துடனும் தொடர்புபட்டவராவார்.

இரு சம்பவங்களிலும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் இவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதோடு, கடற்படையிலிருந்து தப்பிச்சென்ற கடற்படை வீரர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்படும்போது, அவரிடம், 1.60 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதோடு, சந்தேகநபர் பயன்படுத்திய துப்பாக்கியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேகநபரை, நாளையதினம் (16) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் பல பகுதிகளிலும் கொலைகளை செய்து வந்த நபர் கைது. கொழும்பின் பல பகுதிகளிலும் கொலைகளை செய்து வந்த நபர் கைது. Reviewed by Madawala News on September 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.