மகிந்த ராஜபக்ஷ ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி தமிழில்.....


விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது கையாண்ட பொறிமுறையை, தமது கட்சி ஆட்சி அமைத்தால்
நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டும் கையாளவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இந்த கருத்தைக் கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு தமிழ் பேசும் மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமை தவறு என்பதை தற்போது உணர்ந்துவிட்டார்கள்.

அவர்கள் தமக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கின்றனர்.

2014ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமான ஒரு அமைச்சர் இப்போதைய அரசாங்கத்திலும் அமைச்சராகவே இருக்கிறார்.

2018ம் ஆண்டு கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற வேளையில், அதனைத் தடுக்க இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அதேநேரம் 2019ல் தமது அரசாங்கம் உருவாகுமாக இருந்தால், முதலீடுகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தொடர்பாடலுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்.

2009ல் யுத்தம் இடம்பெற்றக் காலத்தில் ட்ரொய்க்கா என்ற பொறிமுறையை அரசாங்கம் பின்பற்றியது.

இரண்டு தரப்பிலும் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அந்த குழு எந்த தருணத்திலும் முக்கியமான விடயங்கள் சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் அந்த பொறிமுறை அமைக்கப்பட்டது.

அவ்வாறான பொறிமுறை ஒன்று பொருளாதார அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயற்படுத்தப்படும் என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது மகன் நாமல் ராஜபக்ஷவிற்கு 30 வயதே ஆகின்ற நிலையில் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது என்றும், எனினும் தமது சகோதரர் வேட்பாளராக இருப்பார் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஆனால் மக்களுக்கு தேவையானது யார் என்பதை கட்சியே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அவரது சகோதரர்களில் யார் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்பது பற்றிய விபரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

மேலும் தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் நானே கிளிநொச்சிக்கு வந்து அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மட்டுமல்ல, பெரும்பான்மையான மக்கள் இலங்கை அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெல்ல முடியாது என நம்பிக்கை வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

எனக்கு நம்பிக்கை இருந்தது ஏனெனில், அவர்கள் தொடர்பில் நான் ஆரம்பம் முதலே நன்கு அறிந்திருந்தேன். எனவே அவர்களின் மனநிலை எனக்கு நன்கு தெரியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி தமிழில்..... மகிந்த ராஜபக்ஷ ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி தமிழில்..... Reviewed by Madawala News on September 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.