ஶ்ரீ லங்கன் விமானத்தில் எனக்கு வழங்கப்பட்ட கஜுவை நாயும் சாப்பிடாது !


நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவுப் பொருட்களை கொள்ளை இலாபமீட்டுகின்றவர்களுக்கு
தேவையான வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தும் முறையான செயற்திட்டமொன்று குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அண்னையில் தான் நேபாளில் இருந்து இந்தியாவுடாக இலங்கை வந்த போது ஶ்ரீ லங்கன் விமானம் ஊடாக இலங்கை வந்ததாகவும் அதன்போது தனக்கு வழங்கப்பட்ட கஜுவை மனிதர்கள் அல்ல  நாய்க்கும் உண்ண முடியது  என குறிப்பிட்டார்.யார் இவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
ஹம்பாந்தோட்டை மாகம்புர ருகுணு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை விவசாய சமூகத்துடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு தேவையான கைவிடப்பட்ட வயல் நிலங்களை மீண்டும் விளைச்சல் நிலங்களாக மாற்றும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக விவசாய சமூகத்திற்கு அறிவூட்டுவதற்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்ட தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜின் – நில்வளவ கங்கை திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இத்திட்டத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் குறித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஒரு விசாரணை இடம்பெறும் என்று தெரிவித்தார்.

ஜின் – நில்வளவ நீர்ப்பாசன திட்டத்தில் இடம்பெற்றுள்ள முறைக்கேடுகள் குறித்து இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் தாமதம் மற்றும் மந்தகதியான நிலையினை கவனத்திற்கொண்டு இத்தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எவ்வாறான போதும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் அனைவரும் தமது அரசியல் பெறுமானங்களை பாதுகாத்து செயற்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாக கூறுவதாக தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட அபிவிருத்தியில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் இம்மாவட்ட விவசாய சமூகத்தின் எதிர்பார்ப்பாகவுள்ள நில்வளவ திட்டம் மிகவும் அவசியமான ஒன்று என்ற கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விவசாயத் துறையில் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தி விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள விரிவான திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.


விவசாய சமூகத்தின் பிரச்சினைகள் உள்ளடங்கிய அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, தென் மாகாண விவசாயத்துறை அமைச்சர் யூ.ஜீ.பீ. ஆரியதிலக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் விவசாய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ஶ்ரீ லங்கன் விமானத்தில் எனக்கு வழங்கப்பட்ட கஜுவை நாயும் சாப்பிடாது ! ஶ்ரீ லங்கன் விமானத்தில் எனக்கு வழங்கப்பட்ட கஜுவை நாயும் சாப்பிடாது ! Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.