கட்டாரை வைத்து இலட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கட்டுகஸ்தோட்டையில் சிக்கினாள்.


(மொஹொமட்  ஆஸிக்)​ 
கட்டார் நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி  நாட்டில் பல பாகங்களில் இருந்து 27  நபர்களிடம்
 16 இலட்சம் ரூபாய்க்கும் அதிப பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும்  கும்பல் ஒன்றை சேர்ந்த பெண் ஒருவரை கட்டுகஸ்தோடைப் பொலீஸார் இன்று 12 ம் திகதி கைது செய்துள்ளனர்.


இச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.


கண்டி ,கட்டுகஸ்தோட்டை ,மாத்தளை ,உக்குவலை, தெல்தெனிய மற்றும்  யக்கள ஆகிய பிரதேசங்களில்  வசிக்கும் 27 பேர்களிடம் இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளதாக பொலீஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.


கட்டார் நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஆண்கள்  மற்றும் பெண்களிடம் இருந்தும் இவ்வாறு பணம் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.


இவர்களிடம் பெற்ற பணத்தை  இதன் முக்கிய சந்தேக நபரிடம் கொடுக்கப்பட்டுள்ளதா​க கைது செய்யப்பட்ட பெண் பொலீஸாரிடம் கூறியுள்ளதுடன் அச் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரம்  இக் கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் இருப்பின் கட்டுகஸ்தோட்டை பொலீஸில் முறைப்பாடு செய்யுமாரும் பொலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இன்று 12 ம் திகதி கைது செய்யப்பட்ட பொல்கொல்லை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணை கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.


கட்டுகஸ்தோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.

2018 09 12 ஆஸிக்
கட்டாரை வைத்து இலட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கட்டுகஸ்தோட்டையில் சிக்கினாள். கட்டாரை வைத்து இலட்சக்கணக்கில்  மோசடி செய்த பெண் கட்டுகஸ்தோட்டையில் சிக்கினாள். Reviewed by Madawala News on September 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.