பிரதேச சபை உறுப்பினர்களது மாதாந்த கொடுப்பனவை 15,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாய் வரை அதிகரிக்கவேண்டும் என ஐ.தே.க உறுப்பினர் கலீல் முன்வைத்த பிரேரணை தோற்கடிப்பு.


(மொஹொமட்  ஆஸிக்)​,
பிரதேச சபை உறுப்பினர்களது  மாதாந்த கொடுப்பணவு 15,000  ரூபாயில் இருந்து 30,000
ரூபாய் வரை அதிகரிக்கப்பட் வேண்டும் என்று பூஜாபிட்டிய பிரதேச சபையின ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ்.எம். கலீல் இன்று 11 ம் திகதி இடம்  பெற்ற  பிரதேச சபையின் பொதுக் கூட்டத்திற்கு முன்வைத்த பிரேரனை அச் சபையின் சில உறுப்பினர்களது எதிர்ப்பினால் நிறைவேற்றப்பட வில்லை.


பூஜாபிட்டிய பிரதேச சபையின் பதில் தலைவர் ஏ.எல.எம்.ரஸான் அவர்களது தலைமையில் இன்று 11 ம் திகதி பூஜாபிட்டிய நகரில்  அமைந்துள்ள பிரதேச சபையின்  அலுவலக  கேட்போர் கூடத்தில் இக் கூட்டம் இடம்பெற்றது.

இப் பிரேரனையை முன் வைத்து உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் முன்னாள் எதிர் கட்சி தலைவருமான  எஸ்.எம். கலீல் கருத்து தெரிவிக்கையில்,


பிரதேச சபை உறுப்பினர்களுக்கு  மாதாந்தம் வழங்கப்படும் 15,000 ரூபாய் கொடுப்பணமும்  4000 ரூபாய் தொலைபேசிக் கொடுப்பணமும் இன்றை சூழலில் தமது  கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு போதாத நிலையில் உள்ளதால் பிரதேச சபை உறுப்பினர்களது மாதாந்த கொடுப்பணவு 15,000  ரூபாவில் இருந்து 30,000 ரூபாய வரைக்கும், உப தலைவர்களது கொடுப்பணவு 20,000 இருந்து 35,000 ரூபாய வறைக்கும் சபைத் தலைவர்களது கொடுபபணவு 25,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாய வரைக்கும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தொலெபேசிக்கான மாதாந்த கொடுப்பணவு 1000 ரூபாயில் இருந்து 4000 ரூபாய வறைக்கும் அதிகரிக்கப்படவேண்டும் என்று கூறினார்.


இப் பிரேரனைக்கு சபையில் சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.


இங்கு உரையாற்றிய முன்னாள் தலைவரும் ஐமசுமு அங்கத்தவருமான அனுர மடலுஸ்ஸ, இத்தேர்தல் முறை நாட்டுக்கு உகந்ததல்ல என்றும் இதில் பல சிக்கள்கள கானப்படுவதாகவும் தெரிவித்துடன் இதன் மூலம் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் பொடுப்பணவும் அதிகம் எனறே தோன்றுகின்றது என்றும் மீண்டும் கொடுப்பணவை அதிகரித்து கேட்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் தெரிவிததார்.


இங்கு கருத்து தெரிவித்த ஐமசுமு உறுப்பினர் உவைஸ் ரஸான் கருதுத்து தெரிவிக்கையில்   இப் பிரேரனையை நிறைவேற்றி மேலிடத்திற்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அது தொடர்பாக ஆராய்வது மேலிடங்களின் பொருப்பு என்றும் கூறினார்.


இங்கு கருத்து தெரிவித்த சபையின் பதில் தலைவர் ஏ.எல்.எம். ரஸான், இப் பிரேரனையை முறைப்படி சபைக்கு முன்வைத்த பின் மீண்டும் ஒரு சபையில   கலந்லோசிக்க முடியும் என்று தெரிவித்தார்.

பிரதேச சபை உறுப்பினர்களது மாதாந்த கொடுப்பனவை 15,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாய் வரை அதிகரிக்கவேண்டும் என ஐ.தே.க உறுப்பினர் கலீல் முன்வைத்த பிரேரணை தோற்கடிப்பு. பிரதேச சபை உறுப்பினர்களது  மாதாந்த கொடுப்பனவை 15,000  ரூபாயில் இருந்து 30,000 ரூபாய் வரை அதிகரிக்கவேண்டும் என ஐ.தே.க   உறுப்பினர்  கலீல் முன்வைத்த பிரேரணை தோற்கடிப்பு. Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.