அகில இலங்கை (தேசிய மட்ட) கபடி போட்டியில் துணைச் சம்பியன் பட்டத்தை வென்றது நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை. - Madawala News Number 1 Tamil website from Srilanka

அகில இலங்கை (தேசிய மட்ட) கபடி போட்டியில் துணைச் சம்பியன் பட்டத்தை வென்றது நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை.


நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை கபடி அணியினர் இம்மாதம் 8,9 ஆம் திகதிகளில்
கண்டி அஸ்கிரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டிகளில் பங்குபற்றி இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்தனர்.

10.09.2018 திங்கட்கிழமை கண்டி பல்லேகல உள்ளக அரங்கில் இடம் பெற்ற இறுதி போட்டியில் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை அணியினர் மிகச்சிறப்பாக எதிர் அணியான யாழ்ப்பாணம் நெல்லியடி வித்தியாலய கபடி அணியினரை எதிர் கொண்டு துணைச் சம்பியன் படத்தினை தமதாக்கிக் கொண்டனர்.

தேசிய மட்ட போட்டிகளில் இவ்வாறான ஒரு வெற்றியானது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக கொண்டாடப்பட வேண்டியதாக கருதப்படுகிறது.

அதே தினங்களில் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் டி.எஸ் சேனநாயக்கா கல்லூரி மைதானங்களில் நடைபெற்ற
தேசிய மட்ட பெட்மின்டன் போட்டிகளில் பங்கு பெற்றிய அணியினர் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததோடு காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான கொழும்பு ஆனந்தா கல்லூரியிடம் வெற்றி வாய்பினை நழுவ விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த காலங்களில் கமு/அல்-அஷ்ரக் தேசிய  பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தில் பல்வேறு துறைகளிலும் தமது திறமைகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

17 வயது பிரிவினருக்கான தேசிய மட்ட கபடி போட்டியில் நிந்தவூரின் இன்னுமொரு பாடசாலையான அல்-மதீனா வித்தியாலம் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்டமையும் சிறப்பம்சமாகும்.

அகில இலங்கை பாடசாலை பெருவிளையாட்டுக்களான  பெட்மின்டன் மற்றும் கபடி போட்டிகளில் பங்குபற்றி பாடசாலைக்கும் நிந்தவூருக்கும் பெருமை தேடித்தந்த அனைத்து வீரர்களுக்கும் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் மற்றும் விளையாட்டுக் குழு ஆசிரியர்கள் (HM.Jameen, A.Haleem Ahmath, P.Navaradnam, MSM.Safeer, AM.Ansar, MIM.Azmy)
முன்னாள் விளையாட்டுக் குழு ஆசிரியர்கள்
(MB.Mahroof, ACM.Nawas, ABM.Naleem) மற்றும் பாடசாலையின் அனைத்து சமூகமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

பாடசாலையின் பழையமாணவர்கள் இப்போட்டிகளுக்காக வீரர்களை தயார்படுத்தியதோடு தங்குமிட வசதி மற்றும் நிதி உதவிகளையும் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க துணைச் சம்பியன் பட்டத்தினை வெற்றிபெற பங்களிப்பு செய்த அனைத்து வீரர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், அதிபர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகள் அனைவருக்கும் நிந்தவூர் PRF சமூக சேவை அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Sameen Mohamed Saheeth
(பழைய மாணவர் - 
கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை,
நிந்தவூர்)
அகில இலங்கை (தேசிய மட்ட) கபடி போட்டியில் துணைச் சம்பியன் பட்டத்தை வென்றது நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை. அகில இலங்கை (தேசிய மட்ட) கபடி போட்டியில் துணைச் சம்பியன் பட்டத்தை வென்றது நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை. Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5