மனைவி மேல் எம்புட்டு பாசம் இந்தாளுக்கு.....


ஹெரோய்ன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் கைது​செய்யப்பட்டு விளக்கமறியிலில்
வைக்கப்பட்டுள்ள தனது மனைவியை பார்க்கச் சென்ற நபர் ஒருவர், மனைவிக்குக் கொண்டுசென்ற உணவுப் பொதியில், 4,220 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த நிலையில், சிறைச்சாலைக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேகநபர், தான் கொண்டுசென்ற உணவுப் பொதியில் மறைத்து, மனைவிக்கு ஹெரோய்ன் கொண்டுசெல்வதாக, வாழைத்தோட்டப் பொலிஸ் பிரிவின் ஊழல் ஒழிப்பு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமையவே, சந்தேகநபரைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், சந்தேகநபரைச் சோதனையிட்ட போது,
10 பேருக்கு விநியோகிக்கக் கூடிய அளவில், உணவுப் பொதிகள் காணப்பட்டதாகவும், அவற்றில் ஒரு பொதியிலிருந்தே, குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவி மேல் எம்புட்டு பாசம் இந்தாளுக்கு..... மனைவி மேல் எம்புட்டு பாசம் இந்தாளுக்கு..... Reviewed by Madawala News on September 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.