ராஜபக்ச சகோதரர்கள் போட்டியிடுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமானது. i
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச சகோதரர்கள் போட்டியிடுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு
சாதகமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை மாலை சீனக்குடாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஜனாதிபதி தேர்தலில் எனது சகோதரர்களில் ஒருவரே போட்டியிடுவார் என  இந்தியாவில் மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தாலும் அவ்வாறு தனது சகோதரர்களுக்கு சந்தர்பத்தை வழங்குவார் என நான் நினைக்கவில்லை. ஏன் எனில் இந்திய அரசியல் தலைவர்களுடனான சந்திப்பில் தனக்கு அடுத்தது தனது மகன்தான் என்பதை போலவே நாமலை மஹிந்த ராஜபக்ச முன்னிலைப்படுத்தினார். “ஜனபலய” ஆரப்பாடமும் இதற்கான ஒத்திகையாகவே காணப்பட்டது.

தனது சகோதரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கினால் நாமலால் ஒருபோதும் ஜனாதிபதி ஆசனத்தில் அமரமுடியாது என்பது மஹிந்த ராஜபக்சவுக்கு நன்றாக தெரியும். ஆனால் மஹிந்த ராஜபக்ச கூறியதைப் போன்று தனது சகோதர்களில் ஒருவரை களமிரக்கினால் அது ஐக்கிய தேசிய கட்சிக்கே சாதகமாக அமையும்.

வேட்பாளர் நியமனத்தில் கூட்டு எதிர்கட்சிக்குள் பாரிய கருத்து முரண்பாடு காணப்படுகிறது. விமர்வீரவமச வலதுபக்கம் கையை காட்டினால் வாசுதேவே இடது பக்கம் கைகாட்டுகிறார். இவர்களுக்கு இடையில் குமார வெல்கம எந்த பக்கமும் கை காட்ட வேண்டாம் என கூறுகிறார். ஆகவே இவர்களுக்கு இடையில் காணப்படும் இந்த கருத்து முரண்பாடல் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருக்கு போட்டியாக இதுவரை யாரும் இல்லை.

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் உங்கள் உள்ளங்களில் உள்ளார். நீங்கள் யாரை மனதில் நினைத்துள்ளீர்களோ அவர்தான் எமது வேட்பாளராக நியமிக்கப்படுவார் என தெரிவித்தார்

ஊடகப்பிரிவு
ராஜபக்ச சகோதரர்கள் போட்டியிடுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமானது. i ராஜபக்ச சகோதரர்கள் போட்டியிடுவது ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமானது. i Reviewed by nafees on September 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.