ஹொரவ்பொத்தானயில் அரச போருந்தும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.


முஹம்மட் ஹாசில்.-
ஹொரவ்பொத்தான - அனுராதாபுரம் பிரதான வீதியில் அலப்பெத்தாவ பகுதியில் நேற்று(11)
மாலை 6.45 மணியளவில் ஹொரவ்பொத்தானயில் இருந்தது கொழும்பு நோக்கி சென்ற அரச போருந்து ஒன்றும்  அனுராதாபுரத்தில் இருந்தது ஹொரவ்பொத்தான நோக்கி வந்த டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

இவ்விபத்தில் பஸ் சாரதி, டிப்பர் சாரதி, டிப்பர் சாரதியின் உதவியாளர் ஒருவர் மற்றும் பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் மொத்தமாக நால்வர் படுகாயம் அடைந்ததையடுத்து குறித்த நால்வரையும் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர், இதன் பின்னர் காயமடைந்த பயணியை தவிர ஏனைய மூவரையும் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதாபுர வைத்தியசாலைக்கு அனுப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் இவ்விபத்து காரணமாக இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை  ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


ஹொரவ்பொத்தானயில் அரச போருந்தும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து. ஹொரவ்பொத்தானயில் அரச போருந்தும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து. Reviewed by Madawala News on September 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.