டாக்டர் எம்.எஸ். இப்றாலெவ்வை பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வேலை நிறுத்தம்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக
தெரிவிக்கபடுகிறது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற டாக்டர் எம்.எஸ். இப்றாலெவ்வையை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதை கண்டித்தே  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது .


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக டாக்டர் திருமதி கலாரஞ்சனி நியமிக்கப்பட்டு பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

இந்நிலையில் ஓய்வு பெற்றுச் சென்ற டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்ற நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்றுச் சென்ற டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை கண்டித்தும் தற்போதைய பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சனியே பணிப்பாளராக அமர்த்த வேண்டும் என வலியுறுத்தியும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  ஊழியர்கள்  வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுகின்றனர்.


இன்று  8 மணியிலிருந்து பகல் 12 மணி வரை வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதென தீர்மானித்துள்ளதாகவும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற் கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டாக்டர் எம்.எஸ். இப்றாலெவ்வை பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வேலை நிறுத்தம். டாக்டர் எம்.எஸ். இப்றாலெவ்வை பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வேலை நிறுத்தம். Reviewed by Madawala News on September 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.