கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா
தெரிவித்திருப்பதாக கூறப்படும் கருத்து தொடர்பில் விசாரணை ஆரம்பித்திருப்பதை காண முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்து உண்மைய நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். Reviewed by Madawala News on September 15, 2018 Rating: 5