என் அன்புச் சகோதரிக்கு ஒரு மடல்...


அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ,
நீ நலம் என்று வட்ஸ்அப் ஸ்டேடஸ் மூலம் அறிந்துகொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்.


நீ அறிந்தும் அறியாதது போல செய்யும் ஓரிரு விடயங்களை இம்மடலில் தொட்டுச் செல்கிறேன்,இன்ஷா அல்லாஹ்.

நீ ஒரு    கண்ணியமான பெண்ணாக இருக்கிறாய்.அல்லாஹ் உன்னை கண்ணியப்படுத்தி  ஒரு அத்தியாயத்தையே அல்குர்ஆனில் அமைத்துள்ளான்.அல்லாஹ்வினால் குறிப்பிடப்படும் அளவுக்கு நீ மதிக்கப்படுகிறாய்.

உன் உடலும் ஆத்மாவும் கண்ணியமானது.பாதையோரத்தின் கோடிக்கணக்கான கற்களின் மத்தியில் சுடர் விட்டு ஜொலித்ததால் பொறுக்கி எடுக்கப்படும் இரத்தினமாய் பாதுகாக்கப்பட வேண்டியவளாக இருக்கிறாய்.

சகோதரியே! கொஞ்சம் துவர்க்கலாம். சொல்வதைக் கொஞ்சம் கேள்.!!!

நீ அறிந்தோ அறியாமலோ உன் கை,கால்,முகம் என்று எதற்காக  ஒவ்வொரு அங்கம் அங்கமாக ஸ்ட்டேடஸ்,ப்ரொபைல் ஆக இடுகிறாய்...?பெண்களின் ஒவ்வொரு அங்கமும் அவ்ரத் என்பதை மறந்தாயா? உன் வரட்டு கௌரவம் அல்லாஹ்விடம் எடுபடமாட்டாது.எந்த விதத்தில் உன் அழகை வெளிப்படுத்தினாலும் பாவம் என்பதை மனதில் நிறுத்திக்கொள்.

என் சகோதரியே!  யார் பார்ப்பதற்காக இவற்றை செய்கிறாய்..?
முஸ்லிம் பெண்ணாகிய நீ ஒவ்வோரு அங்கத்தையும் அந்நிய ஆடவனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


கண்களை வேறாகவும் கைகளை வேறாகவும் முழு உடல் தெரியாமல் மறைத்தும்  இடுகிறாய். நீ மருதாணி இட்டதை யார் காட்டச் சொன்னார்கள்? நீ  எடுத்த செல்பியை யார் காட்டச் சொன்னார்கள்? முழுமையாகவோ அங்கம்  அங்கமாகவோ எப்படி நீ இட்டாலும் நிச்சயமாக அதன் கூலியை நரகத்தில் சுவைக்கத் தயாராகு!
உன்னால் மற்றவர்களும் பாவத்தின்பால் தூண்டப்படலாம்.நினைவில் நிறுத்திக்கொள்.!
அவை ஆடவர்கண் விருந்தானால் நரகத்திற்கு விருந்தாவாய்.நினைவில் நிறுத்திக்கொள்.!

என் சகோதரியே! நீ ஒரு முத்து இரத்தினம் என்றெல்லாம் சொல்லிப் பெருமைப்படுகிறாய்.அவற்றை முறையாக பாதுகாக்காவிட்டால் கயவர்களால் திருடப்படலாம் என்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்.!
நீ மறைக்கப்பட வேண்டியவள்.மறைவாக இருக்க வேண்டியவள்.வட்ஸ்அப் எனும் அருளைத் தவறாகப் பயன்படுத்திவிடாதே.அதுவே நாளை மறுமையில் உன் கைசேதத்திற்குக் காரணமாகலாம்.நினைவில் நிறுத்திக்கொள்.

உன் கண்ணியம் அறிந்தததனாலேயே உனக்காய் இச்சிறுமடலை எழுதினேன்.உன் மனம் புன்படும்படியாக இருந்தால் என்னை மன்னித்துக்கொள்.ஆனால் நீ  என்னுடன்  இவ்வுலகில் கோபம் கொள்வதை விட மறுமையில் என் சகோதரியாய் நரகிற்குத் தீனியாவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

இனியும் நீ உன்னை உலகிற்குக் காட்டும் பாவையாக இருக்கமாட்டாய் என நம்புகிறேன்.
நிச்சயமாக அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனும் நன்கறிந்தோனுமாக இருக்கின்றான்!

இன்ஷா அல்லாஹ், வெகு விரைவில் என் அடுத்த மடல் உன்னை வாழ்த்துவதாக அமைய வேண்டும் என எதிர்பார்த்து இச்சிறு மடலை நிறைவு செய்கிறேன்.

இப்படிக்கு உன் நலன் விரும்பும் சகோதரி,

_Binth Fauzar_
#SEUSL
என் அன்புச் சகோதரிக்கு ஒரு மடல்... என் அன்புச் சகோதரிக்கு ஒரு மடல்... Reviewed by Madawala News on September 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.