நிதி விவகாரம்... இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு.


இலங்கை மின்சார சபையை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு நிதி செலுத்தாத விவகாரம் தொடர்பாக, இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இலங்கை மின்சார சபையை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின் உற்பத்தி, மின் விநியோகம் என்பவற்றுக்காக வருடாந்தம் மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு நிதி செலுத்த வேண்டும்.

ஆனால், மின்சார சபை கடந்த 2018ஆம் ஆண்டு, 19 கோடியே 20 இலட்சத்து 600 ரூபாய் வரிப்பணத்தை செலுத்த தவறியுள்ளதாக கூறியே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது
நிதி விவகாரம்... இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு. நிதி விவகாரம்... இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு. Reviewed by Madawala News on September 15, 2018 Rating: 5