CCTV இணைப்பு... வேகமாக சென்று 7 பேருடன் குத்துக்கரணம் அடித்த வேன்...


ஹாலிஎல - பதுளை பிரதான வீதியின்  போகஹமலித்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பெண்கள் அடங்களாக 7 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை ​6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹாலிஎலயில் இருந்து பதுளை நோக்கி சென்றுக்கொண்டிருந்த வேன் வாகனமொன்று குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்கள் திருமண வைபவமொன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக வேன் குடைசாய்ந்துள்ளதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 வீதியின் அருகில் அமைந்துள்ள விற்பனையகமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
CCTV இணைப்பு... வேகமாக சென்று 7 பேருடன் குத்துக்கரணம் அடித்த வேன்... CCTV இணைப்பு... வேகமாக சென்று 7 பேருடன் குத்துக்கரணம் அடித்த வேன்... Reviewed by Madawala News on September 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.