‘கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா ’ ஏற்பாட்டில் 'வசந்த கால பயிற்சி முகாம்'


  எதிர்காலத்தில் இளைஞர்கள் தம்  வாழ்வில்  “சிறந்த ஒரு  சமுதாயத்தை கட்டியெழுப்பி,  எவ்வாறு இளைஞர்கள் வாழ்வில் உச்ச பயன்பாட்டினை அடையலாம்.”  என்பது தொடர்பான  சமகாலத்தில் இளைஞர்கள் எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்கள் போன்றவற்றிக்கான உளவளத்துணை வழிகாட்டலுடன்  வசந்த கால பயிற்சி முகாம் ஒன்றை நடாத்துவதற்கு ‘கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா ’ அமைப்பினால்  ஏற்பாடுகள் செய்யப்பட்டு 2018/09/15 நேற்று நடை பெற்றது.....
                               

   இந்த கருத்தரங்கில் தலைசிறந்த விரிவுரையாளர்களினால் “விரிவுரைகளும், ஆலோசனை வழிகாட்டல், பயிற்சி நிகழ்வும் ”  மற்றும் போலீஸ் உத்தியோகத்தரினால் இளைஜர் நலன், போதை பொருள் பாவனை பற்றிய விழிப்புணர்வு   ஆகியவை சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.... 


இந்த நிகழ்வுக்கு சுமார் பல நூறு மாணவர்கள், இளைஞர்கள் உடன் ஊரின் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு பிரயோசனம் அடைந்தது குறிப்பிடத்தக்கது ...

அல்ஹம்துலில்லாஹ் ......,,,,

இயற்கையுடன் கலந்த ரம்மியமான சூழலில் மாநாடு நடைபெறுவதுடன் கலந்து கொண்ட  சகலருக்கும் பகலுணவுடன்   சிற்றுண்டி  என்பனவும்  தயார் செய்யப்பட்டு வழங்கியமை  விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் நண்றிகலித் தெரிவித்துக் கொள்வதுடன், உதவிகளையும் ஒத்தாசைகளையும்  வழங்கியோருக்கு ‘கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா ’ அமைப்பினர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்...,


தூர இடங்களில் அல்லது வெளிநாடுகளில்  வாழ்வோர் பின்வரும் இணைப்பின் ஊடாக நேரலையைக் கண்டு கொள்ள முடியும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1821865674600821&id=100003322198769

தகவல் : - மௌலவி H.M. முஃமின் முஹம்மட் ( மஜீதி ).
‘கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா ’ ஏற்பாட்டில் 'வசந்த கால பயிற்சி முகாம்'  ‘கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா ’ ஏற்பாட்டில் 'வசந்த கால பயிற்சி முகாம்' Reviewed by Madawala News on September 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.