புலி­களின் ஆயுத விவ­காரம்: ரிஷாதோ ஹிஸ்­புல்­லாவோ இது­வரை முறை­யி­ட­வில்லையாம் :


தமிழ் ஈழ விடு­தலைப் புலி­களின் ஆயு­தங்கள் தம்­மிடம் இருப்­ப­தாகக் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக
முஸ்லிம் அமைச்­சர்­க­ளான  ரிஷாத் பதி­யு­தீனோ, ஹிஸ்­புல்­லா­வோ இது­வரை எங்கும் முறைப்­பாடு செய்­ய­வில்லை. 

அவ்­வாறு முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்டால் அது தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என சட்டம் ஒழுங்கு பிர­தி­ய­மைச்சர் நளின் பண்­டார தெரி­வித்தார். நேற்று சிறிகொத்­தாவில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­ கொண்டு ஊட­க­வி­ய­லா­ளரின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் தமிழ்ப் போரா­ளிகள் கட்­சியின் தலைவர் கே.இன்­ப­ராசா, முஸ்லிம் அமைச்­சர்கள் இரு­வ­ரிடம் தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ஆயு­தங்கள் இருக்­கின்­றன எனத் தெரி­வித்­துள்ளார்.

இது தெடார்பில் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளதா? என்ற கேள்­விக்கு அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்,

இவ்­வா­றான வெறுப்­புப்­பேச்­சுகள், இன முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும் பேச்­சுகள் தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்கள் முறைப்­பாடு எதுவும் செய்­ய­வில்லை. முக­நூலில் ஒரு­வ­ருக்கு எதி­ராக வெறுப்­புப்­பேச்சு இடம்­பெற்­றாலும் நடவடிக்கை எடுக்கமுடியும். முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பார்கள் என்றார்.

-Vidivelliபுலி­களின் ஆயுத விவ­காரம்: ரிஷாதோ ஹிஸ்­புல்­லாவோ இது­வரை முறை­யி­ட­வில்லையாம் : புலி­களின் ஆயுத விவ­காரம்: ரிஷாதோ ஹிஸ்­புல்­லாவோ இது­வரை முறை­யி­ட­வில்லையாம் : Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.