இன்று ஆப்பிள் பாவனையாளர்களுக்கு BiG day... (இன்றைய ஆப்பிள் அறிமுகங்கள் ஒரு பார்வை)


ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது நட்சத்திரத் தயாரிப்பான
ஐபோன்  மற்றும் ஐபேட், மேக்  தயாரிப்புகளில்  பல புதிய நவீன அம்சங்களை அறிமுகப்படுத்துவதுடன், மேலும் சில புதிய சாதனங்களையும் அறிமுகப்படுத்தும்.

உலகம் முழுவதும் இந்த அறிமுக நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகும் என்பதும் ஆப்பிள் ரசிகர்கள் அறிந்ததே..

இந்நிலையில் இன்று புதன்கிழமை ( இலங்கை நேரம் இரவு 10 மணி) ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள குப்பர்ட்டினோ நகரில் உள்ள ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பெயரில் அமைந்திருக்கும் உள்அரங்கில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

ஆகக் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ஐபோன் எக்ஸ் (iPhone X) சாதனத்தில் பல புதிய அம்சங்கள் புகுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன்களின் திரைகளின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து The SUN ஊடகம் ஊகித்து வெளியிட்டுள்ள இன்றைய ஆப்பிள்  அறிமுகங்கள் பற்றிய ஒரு பார்வை தமிழில் ...
ஐபோன் XS

ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் சிறிய ஐபோன் மாடலாக ஐபோன் XS இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபோன் X மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் புதிய பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் XS மேக்ஸ்

ஐபோன் XS மேக்ஸ் மாடல் இந்த ஆண்டு வெளியாக பெரிய ஐபோன் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இது சாம்சங்கின் கேலக்ஸி நோட் 9 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்றும் இதில் 6.5 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி ஆப்பிள் பென்சில் சப்போர்ட் மற்றும் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஐபோன் 9

2018 ஐபோன் மாடல்களில் விலை குறைந்த மாடலாக ஐபோன் 9 இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஒற்றை பிரைமரி கேமரா, டூயல் சிம் ஸ்லாட், புதிய நிறங்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

இன்றைய நிகழ்வில் ஆப்பிள் புதிய வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

அதன்படி வட்ட வடிவம் கொண்ட பெரிய டையல், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, அதிக ரெசல்யூஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் கொண்டிருக்கின்றன.

மேலும், 2018 ஆம் ஆண்டில், அதிக அளவிலான ஸ்மார்ட் வாட்ச் விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் முதல் இடம் பிடித்துள்ளது. 4.7 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்சுகள் விற்பனைக்கு வர உள்ளன

ஆப்பிள் ஐபோன்கள், ஸ்மார்ட் வாட்ச் தவிர ஏர் பவர் வையர்லெஸ் சார்ஜர் அறிமுகமாக உள்ளது. இந்த வையர்லெஸ் சார்ஜர் மூலம், ஐபோன், ஐபாட், ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை ஒரே சமயம் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. கூடுதலாக மேக் புக் ஏர் அடுத்தப்படியாக 13 இன்ச் லேப்-டாப் அறிமுகம் ஆகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்  ஐபோன்களுக்கு மின்ஆற்றல் ஊட்டும் (பேட்டரி) சாதனங்களும் புதிய வகையில் அறிமுகம் காணும்.

ஏர்போட் (Air Pods) என அழைக்கப்படும் ஐபோன்களுக்கான ஒலிப்பேழைகளும் (கம்பி இணைப்பின்றி காதுகளில் வைத்துக் கேட்க உதவும் கருவி) நாளைய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஐபோன்களுக்கான புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் ஐஓஎஸ் 12 வெளியிடப்படும். அடுத்த சில நாட்களில் இந்த புதிய மென்பொருளை பயனர்கள் தங்களின் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இன்று ஆப்பிள் பாவனையாளர்களுக்கு BiG day... (இன்றைய ஆப்பிள் அறிமுகங்கள் ஒரு பார்வை) இன்று ஆப்பிள் பாவனையாளர்களுக்கு BiG day...  (இன்றைய ஆப்பிள்  அறிமுகங்கள் ஒரு பார்வை) Reviewed by Madawala News on September 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.