ஜீப் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின்கம்பத்தில் மோதி வர்த்தகர் உயிரிழப்பு.


காலி - கொழும்பு பிரதான வீதியின் வதுரேகம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற ஜீப் வாகன விபத்தில்
நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

ஜீப் வாகனத்தின் சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் வீதியை விட்டு விலகிய ஜீப் வாகனம் மின்கம்பத்தில் மோதி பின்னர் அருகில் இருந்து தடுப்புச்சுவரில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , விபத்தில் படுகாயமடைந்த சாரதி பலபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பலபிட்டி பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய வர்த்தகர்  ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது
ஜீப் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின்கம்பத்தில் மோதி வர்த்தகர் உயிரிழப்பு.  ஜீப் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின்கம்பத்தில் மோதி வர்த்தகர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on September 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.