இலங்கையில் 250 இந்திய குடும்பங்கள் குடியமர்த்தபட்டதாக பொதுமக்களால் முன்வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு அரசின் பதில் இது...


வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின்
கிராமம் ஒன்றில் (நெடுங்கேணியில்) குடியமர்த்தியுள்ளதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், கவனத்தை செலுத்தியுள்ளதாக தெரிவித்து, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த வெளிநாட்டு பிரஜைகள் அல்லது குடும்பங்கள் நாட்டின் எந்த பாகத்திலும் குடியமர்த்தப்படாததன் காரணத்தினால், அரசாங்க தகவல் திணைக்களம் இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என குறிப்பிட விரும்புகின்றது.


2009ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், இந்தியாவிற்கு யுத்தத்தின்போது அகதிகளாக சென்ற 10,675 இலங்கைப் பிரஜைகள் இன்று வரை தமது சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளனர். இந்த அனைத்து நபர்களும் இலங்கைப் பிரஜைகள் ஆவதுடன், அவர்களது குடியுரிமைநிலை முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 250 இந்திய குடும்பங்கள் குடியமர்த்தபட்டதாக பொதுமக்களால் முன்வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு அரசின் பதில் இது... இலங்கையில் 250 இந்திய குடும்பங்கள் குடியமர்த்தபட்டதாக பொதுமக்களால் முன்வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு அரசின் பதில் இது... Reviewed by Madawala News on September 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.