கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு .


நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில்
ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய புத்தளம் மஹவவ பகுதியில் 77 வயதுடைய பாதசாரி ஒருவர் மீது பாரவூர்தி ஒன்று மோதுண்டமையினால் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் பொத்துஹெர பகுதியில் மோட்டர் சைக்கிள்  ஒன்றும் பேருந்தும் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், மீரிகம பகுதியில் கார்  ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 70 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இங்கிரிய பகுதியில்   மோட்டார் சைக்கிள் விபத்தில்   ஒருவரும்,  குளியாபிட்டி பகுதியை சேர்ந்த ஒருவருமாக மொத்தம் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு . கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு . Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.