ஆளுமை 2000 !எம்.எம்.ஏ.ஸமட்
உலகில் தினமும் ஆயிரமாயிரம்  பேர் பிறக்கின்றனர்.
அவ்வாறு பிறந்து குறிப்பிட்ட காலம் வாழ்ந்து பின்னர் மரணித்துப் போகின்றவர்கள்  எல்லோரையும் மக்கள்  ஞாபகமூட்டிக் கொண்டிருப்பதில்லை.  தமது வாழ் நாட்களை பிறந்த தேசத்துக்காக, சமூகத்துக்;காக அர்ப்பணித்து, மக்களை நன்மையடையச் செய்து  அம்மக்கள் மனங்களைக் கொள்ளைகொண்ட சிலரே  இன்றும் உலக உலகளாவிய ரீதியில் நினைவு கூறப்படுகிறார்கள்;


அவ்வாறே,  இலங்கைத் தீவிலும்; பிறந்து வாழ்ந்து மறைந்த பல்லாயிரம்  தேசப் பிரஜைகளில் ஒரு சிலரே மறைந்தும் மக்கள் மனங்களில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சாதித்த சாதனைகளை, மக்களுக்காக செய்த சேவைகளை, மக்களின் உரிமைகளுக்காக புரிந்த போராட்டங்களை, அவர்களின் ஆளுமைகளின் அடையாளங்களை என பற்பல நினைவுகளை மக்கள் காலத்திற்குக் காலம், சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம்  நினைவுபடுத்துகிறார்கள.; அவ்வாறு நினைவுபடுத்தப்படுகின்றவர்களில் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி  முஸ்லிம் சமூகம் இழந்ததோர் ஆளுமைதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஆவார்.;இலங்கை வாழ் முஸ்லிம்களாலும், முஸ்லிம் அரசியலாலும் அதிலும் கிழக்கு, வடக்கு முஸ்லிம்களினால் அதிகளில்; நினைவு கூறப்படக் கூடிய ஓர் ஆளுமைமிக்க தலைவராக அஷ்ரஃப் வாழ்ந்து மறைந்து செம்டம்பர் 16ஆம் திகதியுடன் 18 வருடங்கள் பூர்த்தியாகிறது.

முஸ்லிம் அரசியலில் அஷ்ரஃப்

1948ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி பிறந்த அஷ்ரப் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி சமூகத்தின் பல கனவுகளோடு விண்ணில் பறக்கையில் மரணம் அவரை அந்த விண்ணிலேயே தழுவிக்கொண்டது. தனது 52வது அகவையில்  இன்னுயிரை நீர்த்தார் அஷ்ரஃப். அவர் மண்ணைவிட்டு பிரிந்து 18 வருடங்கள் உருண்டோடிவிட்டன.
ஆனால், அவரை மரணம் தழுவியதா? அல்லது தழுவச் செய்யப்பட்டதாக என்ற கேள்;விகள் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இருப்பினும், அவர்  மரணத்தை எதிர்பார்த்தே தனது அரசியல் நகர்வுகளை நகர்த்திச் சென்றார்;, அதைத் தனது 'போராளிகளே புறப்படுங்கள்' என்ற கவிதை வரிகளால் உறுதியும்;படுத்தியிருந்தார்.


இந்நாட்டு முஸ்லிம்களின் குறிப்பாக கிழக்கு, வடக்கு முஸ்லிம்களின் அரசியல்  நினைவுகளுக்குச் சொந்தக்காரரான அஷ்ரப் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மண்ணில் பிறந்து, கல்முனை மண்ணில் வளர்ந்து, கம்பஹா மண்ணில் வாழ்க்கைத் துணையோடு இணைந்து, அரநாயக்க விண்ணில் மறைந்த முஸ்லிம் தேசியத்தின் விடிவெள்ளி மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் என்பதை நன்றியுடன் நினைவு கூறவேண்டியுள்ளது. ஏனெனில் இலங்கைத் தேசத்தில் கிழக்கு முஸ்லிம்களை அரசியல் எழுச்சியினூடாக அடையாளப்படுத்தியவர் அவர் என்பதால்தான் அவர் இன்றும் நன்றியுடன் நினைவு கூறத்தக்கவராவார்
இந்நாடு சுதந்திரடைந்த காலம் தொட்டு தங்களுக்கென்று ஒரு அரசியல் அடையாளம் இருக்க வேண்டுமென்று சிந்திக்காது பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் முஸ்லிம்; அரசியல்; தலைவர்கள் தொங்கிக் கொண்டிருந்தனர். பெரும்பான்மைக்;கட்சிகளின் தலைவர்கள் கூறும் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக தங்களது அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக்கொண்டு சமூக நலன்களையும் ஒருவாறு கவனத்து வந்தனர்.ஒரு தேசத்தின் ஒரு தனித்துவ இனத்திற்கான அரசியல் உரிமைககள் எவை என்பதையும், ஒரு அரசிடமிருந்து அரசியல் சானத்திற்கு உட்பட்ட ரீதியில் எவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் மக்கள் மயப்படுத்தாமல,; அவை தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் ஒரு சிறைப்பட்ட அரசியல் வட்டத்திற்குள் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அரசியல் பணயத்தை முன்நகர்த்திச் சென்றுகொண்டிருந்ததொரு  அரசியல் சூழலில்தான் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கென்று,


முஸ்லிம் தேசியத்துக்கென்றதொரு தனித்துவமான அரசியல் அடையாளாம் இருக்க வேண்டுமென்று அஷ்ரப் சிந்தித்தார்.


அதற்காக பல்வேறு முயற்சிகளை அவர் தனது ஆரம்ப இளமைப் பருத்தில் இருந்தே மேற்கொண்டார். உலகின் பல்வேறு சமூகங்களில் வாழ்ந்த  அரசியல் தலைமைகள் தங்களுடைய சமூகங்களுக்காக பெற்றுக்கொடுத்த அரசியல் உரிமைகளைப் பற்றியும் வெற்றிகளைப் பற்றியும் அந்த வெற்றிகளுக்குக்காக அவர்கள் வகுத்துச் செயற்பட்ட வழிமுறைகள் பற்றியும் தேடிக் கற்றுக்கொண்ட அஷ்ரஃப், கற்றல் அனுபவத்தினூடாக செயற்படுவதற்கும், செயற்படுத்துவதற்கும்  இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கென்று, முஸ்லிம் தேசியத்துக்கென்று அரசியல் அடையாளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அந்த அடையாளத்தினூடாக மக்கள் பலத்தை ஒன்றுதிரட்டவும் தனது வாழ்நாளின் முக்கிய யுகங்களை அர்ப்பணித்தார்.


அதற்கான எதிர்கால செயற்றிட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும்.  அத்திட்டங்களை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என அர்ப்பணிப்புடனும், தூர நோக்குடனும் சிந்தித்துச் செயற்பட்டதன் விளைவாக அஷ்ரபினால் 1982ஆம் ஆண்டு காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டு இந்த இயக்கத்தை ஆரம்பித்த அஷ்ரப் 1986ஆம் ஆண்டு அரசியல் கட்சியாகவும் பதிவு செய்து தேசிய அரசியல் நீரோட்டத்தில் முஸ்லிம் தேசியத்துக்கான தனித்துவ அரசியல் அடையாளத் உறுதிப்படுத்தினார்.


தனது பேச்சாற்றலினாலும், மொழிப் புலமையினாலும், ஜனரஞ்சக வாழ்க்கை முறைமையினாலும,; பாகுபாடற்ற சமூகப்  பார்வையினாலும் வெகுவாக வடக்குக் கிழக்கு முஸ்லிம் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட அஷ்ரப், 1987ஆம் ஆண்டு நடைபெற்ற வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தேர்தல் களத்தில் இறக்கி, அதில் கனிசமான ஆசனங்களை வெற்றிகொண்டு வடகிழக்கு மாகாண சபையில் பலமுள்ள எதிர்கட்சியாக கட்சியைத் திகழச் செய்தார்.


அதைத்தொடர்ந்து 1989, 1994 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் மாகாண சபை மற்றும் ஏனைய உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் கட்சியைக் களத்தில் இறக்கி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று முஸ்லிம் தேசியத்தின் அரசியல் பலத்தை  மக்கள் சக்தியுடன் பறைசாட்டியதன் விளைவாக ஆட்சிக்குப் பங்காளியாக இருந்து, அதிகாரங்களை உரிமையோடு பெற்று முஸ்லிம் தேசியத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை மேலும் நிரூபித்துக்காட்டினார்.


இத்தனைக்கும் அவர் பிரதேச வேறுபாடுகளைக் கடந்து முஸ்லிம்கள் என்றதொரு வரையறைக்குள் மக்களை ஒன்றிணைத்து சிறுபான்மை சமூகம் தமது அரசியல் தனித்துவமிக்க வாக்குப்பலத்தினால் தமக்குரிய அரசியல் உரிமைகளைப் பெற முடியும் என்பதைப் புடம்போட்டார். அவர் பெற்றெடுத்த அந்த உரிமைகளின் அடையாளங்கள் இன்னும் காணப்படுகின்றன. இன்றும் அவை பலரை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.


இவ்வாறானதொரு அரசியல் வழிகாட்டியாக, தனித்துவ இனத்தின் ஆளுமைமிக்க தலைமையாக, வாழ்ந்து காட்டி மறைந்த அஷ்ரப் முஸ்லிம் அரசியலில்;  யுகங்களையும் உருவாக்கிச் சென்றுள்ளார்

அஷ்ரஃப் யுகங்கள்

அதுதான், அஷ்ரபின் அரசியலுக்கு முந்திய யுகம், அவரது அரசியல் வாழ்நாள் யுகம் மற்றும் மரணத்திற்குப் பிந்திய யுகம் என்ற மூன்று யுகங்களாகும். முஸ்லிம் அரசியலில், குறிப்பா வடக்கு கிழக்கு முஸ்லிம் அரசியலில் இம்மூன்று யுகங்களை ஒப்பிட்டே முஸ்லிம் தேசியத்தின் அரசியல் பார்வை உள்ளது.


அஷ்ரபினால் ஸ்தாபிக்கப்;பட்ட முஸ்லிம் காங்கிரஸிசினதும் ஏனைய முஸ்லிம்; கட்சிகளினதும் அதன் தலைமைகளினதும் அரசியல் செயற்பாடுகள் மற்றும் காய்நகர்த்தல்கள் அஷ்ரஃப் யுகங்களின் அடிப்படையிலேயே நோக்கப்படுகிறது.


ஸ்தபாகத் தலைவர் அஷ்ரஃ;ப் கட்சியை ஸ்தாபித்து தேர்தலில் களமிறங்;கி கண்ட வெற்றிகளினூடாகப் 11 வருடங்கள் புரிந்த சேவைகள,; சாதித்த சாதனைக்கள் அவர் மறைந்து 18 வருடங்கள் கடந்த நிலையிலும்  பாராட்டத்தக்க அல்லது போற்றக் கூடிய, வரலாற்றில் தடம்பதியக் கூடிய மக்களுக்கான பணிகள் எதுவும் முஸ்லிம் காங்கிரஸின் முதுகெலும்பாக விளங்கும் கிழக்கில் அதன் தற்போதைய தலைமையினாலேயோ அல்லது அஷ்ரபின் நிழற்படத்துக்குப்பின்னால் நின்று அரசியல் செய்து தேர்ல்களில்  வெற்றி பெற்று அங்கத்துவ மற்றும் தேசியபட்டியல் பிரதிநிதித்துவம் பெற்றவர்களினாலோ மேற்கொள்ளப்படவில்லை. என்ற ஆதங்கம்  அன்னாரின் 18வது வருட நாட்களிலும் அன்னாரின் அபிமானிகள் மத்தியில் காணப்படுவதை சுட்டிக்காட்ட வேண்டும்.


ஆங்காங்கே கண்துடைப்புக்காக ஒரு சில நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட்டபோதிலும் முஸ்லிம் தேசியத்தின் அடிப்படைப் பிரச்சினைகளையோ, நீண்டகாலப் பிரச்சினைகளையோ, சமகாலப் பிரச்சினைகளையோ தீர்த்து வைப்பதற்கான ஆரோக்கியமான முன்னெடுப்புக்கள் இதுவரை காலமும் மேற்கொள்ளப்படவில்லை  அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட இக்கட்சியினால் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ற மக்களின் ஆதங்கமானது அதிலும் இளைய தலைமுறையினர் மத்தியில் எற்பட்டு எழுச்சி முஸ்லிம் தேசியத்துக்கான ஆளுமையுள்ள தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் அல்லது உருவாக வேண்டும் என்ற குரல்களை தொடர்ச்சியாக எழச்செய்துகொண்டிருப்பதைக்; காண முடிகிறது..


தலைவர்களும் மக்களும்

தலைவர்கள் உருவாகுவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்று ஒரு சாராரும் தலைவர்கள் காலத்திற்குக் காலம் பிறக்கிறார்கள் என்று மற்றுமொரு சாராரும் கருத்தியல் முரண்பாட்டில் அன்று முதல் இன்று வரை உள்ள நிலையில், தலைவர்கள் உருவானாலோ அல்லது உருவாக்கப்பட்டாலோ அவர்கள் மக்கள் விரும்பும,; மக்களுக்காகச் செயற்படும் தலைவர்களாக மிளிர்வது காலத்தின் தேவையாகும். மக்களின்; விரும்பமும் அதுவாகத்தான் இருக்கிறது.


'ஒரு கட்சியின் உருவாக்கம் ஒரு தனி மனிதனாலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது உண்மைதான் ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஒரு தனி மனிதன் அல்ல.


ஒரே நோக்குள்ள பல மனிதர்கள் ஒரே சிந்தனையுடைவர்களாக ஒரு மித்து ஊக்கத்தோடும், விடாமுயற்சியோடும், தியாகத்தோடும் உழைக்கும்போதுதான் அந்தக் கட்சி பல கிளைவிட்டு படர்ந்து செல்கிறது. நல்லெண்ணமும், தீர்க்கதரிசனமும், சரியான செயல்பாடும் இடையறாத இயக்கமும், காலதேச வர்த்தமானங்களை அனுசரித்த போக்கும், இலட்சியங்களை அடைவதற்கான உறுதியும், இன்னல்களையும் இடையூறுகளையும் தோல்விகளையும் கண்டு சலிப்புறாத மனமும், அங்கத்தவர்களிடையே பொது நோக்கங்களின் பேரில் ஒற்றுமையும். கூட்டு முயற்சியும், எதிரிகளினதும் சதிகாரர்களினதும் தந்திரோபாயங்களை, அடையாளம் காணும் சாமத்தியமும், சூழ்ச்சிகளை சுமுகமாக முறியடித்து முன்னேறும் சாணக்கியமும். எடுத்த கருத்தை முடித்து வைக்கும்  ஆத்ம பலமும், இறை நம்பிக்கையும், முன்னோடிகளான நல்லடியார்களின் மீது நேசமும் பற்றும் இருக்குமானால் நமது கட்சி (முஸ்லிம் காங்கிரஸ்) நிச்சமாக தனது பாதையிலும் பயணத்திலும் பரிபூரண வெற்றியை அடையும் என்பதை நான் உங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்' என இற்றைக்கு 29 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 6வது மகாநாட்டில் உரையாற்றும்போது மறைந்த தலைவர் அஷ்ரப் குறிப்பிட்டிருந்தார்;.


ஒரு கட்சியின் வெற்றிக்கு எத்தகைய செயற்பாடுகள், பண்புகள் அவசியம் என்பதை மறைந்த தலைவர் 29 வருடங்களுக்க முன்னரே கூறிச் சென்றுள்ளார். ஆனால், அவர்  கூறிய விடயங்களில் எவை முஸ்லிம் காங்கிரஸினாலும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகளினாலும் கடைபிடிக்கப்படுகிறது என அவரது அபிமானிகள் எழுப்பும் கேள்விகளில் நியாயமில்லாமலில்லை.


ஒரு தூர நோக்கை இலக்காகக் கொண்டுதான் மறைந்த அஷ்ரபினால் முஸ்லிம்களுக்கான கட்சி உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த இலக்கு நோக்கிய பயணம் அவரது மரணத்துடன் திசைமாற்றப்பட்டுள்ளது. அவரின் யுகம் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது. போலி வாக்குறுதிகளினாலும், ஏகாதிபத்திய தலைமைத்துவப் பண்புகளினாலும் அவர் வித்திட்ட அரசியல் புரட்சி மீண்டும் பழைய குருடி கதவைத்திறடி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என இக்கட்சியை உருவாக்கிய கிழக்கு மக்கள் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை நிராகரிக்க முடியாது..


அஷ்ரபின் தேசிய மற்றும் சமூக ரீதியலான இலக்கை அடையாது அல்லது அடைய மறந்த முஸ்லிம் கட்சிகளின் தலைமமைகள் அந்த பெரும் தலைவர் மறைந்த இந்த செப்டம்பர் 16ல் இருந்தாவது அவர் சிந்தனையில் மலர்ந்திருந்த தேசிய சமாதானத்தை அடைவதற்கும்  முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும், எதிர்பார்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும.; இந்த ஒருமைப்பாடு  அப்பெரும் தலைவருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாக அமையுமென்பதோடு, தேசிய மட்டத்திலும், வடக்குக்,  கிழக்கிலும் அஷ்ரப் எனும் ஆளுமையினால் வித்திட்ட அரசியல் புரட்சியையும் யதார்த்தமாக்கும் என்பது திண்ணம். ஆவ்வாறானதொரு நிலை உருவாகத விடத்து முஸ்லிம் தேசியத்துக்கான ஆளுமையுள்ள தலைமைத்துவத்தை கிழக்கிலிருந்து உருவாக்க முயற்சிக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியமாகவுள்ளது என்பதே புதிய தலைமையினரின் ஆழ்மன வெளிப்பாடகவுள்ளதைக் காண கூடியதாகவுள்ளது.


புதிய தலைமுறையின் முயற்சி


அஷ்ரப் மறைந்த 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் நாள் ஒவ்வொரு வருடமும்; வரும்போதெல்லாம் அவர் ஞாபகமூட்டப்படுகிறார். இருப்பினும், முஸ்லிம் காங்கிரஸினாலும் ஏனைய முஸ்லிம் கட்சிகளினாலும் அவர் நினைவு கூறப்படுவது அரசியல் நலனுக்கானதா அல்லது அபிமானத்துக்கானதா என இடைபோட்டுப் பார்க்கப்படுகிறது. .
ஏனெனில், தேர்தல்கள் வரும்போதெல்லாம் அவரின் நிழற்படங்களை போஸ்டர்களிலும் பெனர்களிலும் அச்சிட்டு வெளிப்படுத்தி, மக்களின் அனுதாபங்களை வாக்குகளாக அள்ளியெடுப்போர் அவர் முன்னெடுத்த பணிகளை தொடர்வற்கும் அவர் வேண்டிநின்ற அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கும் அவர் மக்கள் நலனுக்காக கண்ட கனவுகளை நிறைவேற்றுவற்கும் இன்னும் ஆளுமையில்லாதவர்களாக, கையாலாதவர்களாகவே இருப்பதாக அஷ்ரப் அபிமானிகளின்;  கருத்தாக உள்ளது.அரசியல் நலனுக்காக, தேர்தல் வாக்குகளுக்காக ஞாபகமூட்டப்படும் அஷ்ரபின் நினைவலைகள் அந்த ஒவ்வொரு 16ஆம் திகதியுடனும் முடிந்து விடுகிறது. அல்லது அவரது பாடல் வரிகளையும் மேடைப் பேச்சுக்களின்; தத்துவங்களையும் நிழற்படங்களையும் முன்வைத்து வாக்குக் கேட்டு வெற்றிபெற்ற கையுடன் மறக்கப்பட்டுவிடுகிறது.  அவரால் அரசியல் அடையாளம் கண்ட பலா,; ஏன் பதவிகள் கண்ட பலர் அவரை நிணைத்துப்பார்ப்பது செப்டம்பர் 16ஆம் திகதி அல்லது அவர்கள் மக்கள் மன்றம் செல்வதற்காக வரும் தேர்தல் காலங்களில் மாத்திரம்தான்.   இந்நாட்கள் தவிர, அவர்கள் மனங்களில் அஷ்ரப் சஞ்சரிப்பாரா என்பது கேள்விக்குறியாகும்.


ஆனால், உண்மைக்குண்மையாக அஷ்ரபின் பேச்சாற்றலினால் கவரப்பட்டு, வாதத்திறமையைப் பார்த்து ரசித்து, பழகும் பண்புகளினால் அள்ளுண்டு,  ஒரு வாழ்க்கைத் தத்துவமாக, ஒரு அரசியல் ஞாணியாக, ஆளுமையின் அடையாளமாக, அரசியல் சாணக்கியமிக்க தலைமையாக வாழ்ந்து காட்டிய அஷ்ரப் வழி நடந்து, அவரின் யுகத்தில் முஸ்லிம் காங்கிரஸின் நேசமிக்கவர்களாக, கட்சிப் போராளிகளாகச் செயற்பட்ட அவரது அபிமானிகள்; இன்னும் அவரில் கொண்ட அபிமானத்திற்காக அவரை இதய உணர்வுடன் ஞாபகமூட்டுகிறார்கள்.


இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பேரினவாத கடும்போக்காளர்களினால் எதிர்நோக்கும் ஒவ்வொரு நிகழ்வின் போதும்,. ஒவ்வொரு சம்பவங்களின்போதும், ஒவ்வொரு நெருக்குவாரங்களின் போதும்  தலைவர் அஷ்ரப் இருந்திருந்தால் இவ்வாறு நடைபெற்றிருக்காது என்று ஞாபகமூட்டியவர்களாக உள்ளனர். இவர்கள்தான் தாம் நேசித்த தலைவன் மரணித்தித்து மண்ணறை சென்ற பின்னும் அத்தலைவனை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்கள்.


இந்நிலையில், முஸ்லிம் தேசியம் முறையான தலைமைத்துவம் இன்றி மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலிருந்து மீள வேண்டுமாயின் சோரம் போகாத,  முதுகெலும்புடனும், மக்கள் அளித்த வாக்குப்பலத்துடன் துணிந்து நின்று, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஆளுமையுள்ள தலைமைத்துவச் செயற்பாட்டின் மூலம் தமக்குரிய அரசியல் அதிகாரத்தினூடாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய, உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய அரசியல் தலைமை முஸ்லிம் தேசியத்துக்கு அவசியமாகிறது. இந்த அவசியத்தை நிறைவேற்ற முஸ்லிம் தேசியத்தின் புதிய தலைமுறையினர் முன்வருவதும் அவசியமாகும்;. குறைந்த பட்சம் கூட்டுத்தலைமைத்துவ சபை ஒன்றையாவது உருவாக் இளைய தலைமைமுறையினர் தங்களது ஆளுமைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டும்.


மக்கள் நலன்களை நிறைவேற்றுவதை பகுதி நேர அரசியல் பணியாகவும் தங்களையும் தாங்கள் நேசிக்கின்றவர்களையும் அரசியல் அதிகாரத்தினூடாக கிடைக்கப்பெற்றுள்ள வளங்களைக் கொண்டு வளர்த்துக்கொள்வதை முழு நேர அரசியல் பணியாகவும் கருதிச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தலைமைகளுக்குப் பதிலாக முஸ்லிம் தேசியத்திற்கு புதிய தலைமுறையிலிருந்து  தலைமைத்துவம் உருவாக வேண்டும் அல்லது தலைமைத்துவ சபை  உருவாக்கப்பட வேண்டும்.


இது இன்றைய முஸ்லிம் தேசியத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டுமாயின்  இதனை அடைவதற்காக உழைக்க வேண்டியவர்கள் முஸ்லிம் தேசியத்தின் புதிய தலைமுறையிர்தான்; 'தலைவர்கள் உருவாகுவதில்லை உருவாக்கப்படுகிறார்கள்' என்று மொழிந்தவரே 2000ஆம் ஆண்டில் ஆளுமையுள்ள தலைமையாக விளங்கிய  அஷ்ரப் என்;பதும் அந்த ஆளுமையின்; வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் தேசியத்தின் புதிய தலைமுறையினர் அதற்கான முயற்சியை  முன்னெடுப்பது காலத்தின் தேவையும் பெரும் தியாகமுமாகும். அத்தியாகத்துக்கான நகர்வுகள் ஹிஜ்ரி 1440லிருந்து விரைவுபடுத்தப்படுமா?

விடிவெள்ளி – 2018.09.13
ஆளுமை 2000 ! ஆளுமை 2000 ! Reviewed by Madawala News on September 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.