அமெரிக்க டாலரின் இன்றைய "சாதனை" 168.63 ரூபாவாக பதிவாகியது.


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை
மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 168.63 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அமெரிக்க டொலர் பலமடைந்து அதற்கு எதிரான நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பது இலங்கையை மாத்திரமன்றி மேலும் பல உலக நாடுகளைப் பாதித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலைமையால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டொலர் பலமடைந்து அதற்கு எதிரான ஏனைய நாணயங்களின் பெறுமதி மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவிலும் இந்த நிலைமை காணப்படுகிறது  என்றார்.
அமெரிக்க டாலரின் இன்றைய "சாதனை" 168.63 ரூபாவாக பதிவாகியது. அமெரிக்க டாலரின் இன்றைய "சாதனை" 168.63 ரூபாவாக பதிவாகியது. Reviewed by Madawala News on September 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.