15 - 19 வயதுக்கு இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு.


( ஐ. ஏ. காதிர் கான் )
   இலங்கையில் 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில்,  கருக்கலைப்பு
வீதம் அதிகரித்துள்ளதாக, பொரளை - காசல் வீதி, மகளிர் மருத்துவமனையின் விசேட நிபுணர் டாக்டர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

   இலங்கையில் நாளொன்றுக்கு  சராசரியாக ஆயிரம் கருக்கலைப்புக்கள் நிகழ்ந்துவரும் நிலையில்,

கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களை ஆராய்ந்தால், 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியிலேயே  கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளதாகவும் டாக்டர் குறிப்பிட்டுள்ளார்.


   பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரிப்பதும், பிள்ளை பெறுவதும் பிரச்சினைகளுக்குரிய விடயமாகும். இதற்காக அரசாங்கத்திற்கு,  கூடுதலான தொகையை செலவழிக்க நேர்ந்துள்ளது என்றும் டாக்டர்  தெரிவித்துள்ளார்.


   குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சிறப்பு நிபுணர் டாக்டர் சஞ்சீவ கொடகந்த கருத்து வெளியிடுகையில், குடும்பத்திட்டமிடல் மூலம் அனாவசிய கர்ப்பங்களைத்  தவிர்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


   இலங்கையின் சனத்தொகையும் வெகு சீக்கிரமாக  அதிகரிப்பதால்,  குடும்பக் கட்டுப்பாடு குறித்தும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், குடும்பத் திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு நிபுணர் டாக்டர் கீதாஞ்சலி மாபிட்டிகம சுட்டிக்காட்டியுள்ளார்.
15 - 19 வயதுக்கு இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு.  15 - 19 வயதுக்கு  இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு. Reviewed by Madawala News on September 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.