நான்கு பேரை பலி எடுத்த வாதுவ பேஸ்புக் களியாட்டத்தின் ஏற்பாட்டாளர்களை பொலிசார் கைது செய்யாமல் இருப்பது இதனால்தான்...


நான்கு பேரின் உயிரைப் பலியெடுத்துள்ள வாதுவ பேஸ்புக் களியாட்டத்தின் பின்னணியில் களுத்துறை
மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல அமைச்சர் ஒருவர் செயற்பட்டதாகவும் அவருடைய ஆதரவுடனேயே அந்தக் களியாட்ட வைபவம் ஏற்பாடு செய்யப்பட் டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது பற்றி தேசிய சுதந்திர முன்னணி யின் தேசிய அமைப்பாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர நேற்று முன்தினம் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ள தகவலில்,

நாலுபேரின் உயிரைப் பலியெடுத்த இந்த பயங்கரமான பேஸ்புக் களியாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை .

அதற்குக் காரணம், அந்தக் களியாட்டம் பிரபல அமைச்சர் ஒருவரது ஆதரவுடனே ஏற்பாடு செய்யப்பட்டி ருந்ததே காரணம்,

இவ்வாறு நாலுபேர் இறந்த பின்னர் கூட பொலிஸார் ஏற்பாட்டாளர்களைத் தேடிப்பி டித்து கைது செய்யாமலிருப்பதே, அந்த அமைச் சர் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற்கு உறுதியான சாட்சியாகும்.

சாதாரணமாக ஒரு வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் கூட அந்த வாகனத்தின் சாரதி குற்றம் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி விடுவார்கள்,

இரண்டுபேர் அடிபட்டாலும் உடனே கைது செய்து விசாரணை நடத்துவார்கள், ஆனால் இந்தப் பயங்கரக் களியாட்டத்திலோ நாலுபேர் இறந்துவிட்டார்கள்.

ஆயினும், அதனைஏற்பாடு செய்த மாலபேயைச் சேர்ந்த அமில புஷ்பகுமார மற்றும் கொதட்டுவவைச் சேர்ந்த ஹர்ஷன ஏரங்க மற்றும் ஏற்பாட்டாளர்களை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை.

இதற்குக் காரணம், அந்தப் பிரபல அமைச்சரின் ஆதரவு டனேயே அவர்கள் களியாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாகவும் தெரிவித்தார்.

நான்கு பேரை பலி எடுத்த வாதுவ பேஸ்புக் களியாட்டத்தின் ஏற்பாட்டாளர்களை பொலிசார் கைது செய்யாமல் இருப்பது இதனால்தான்... நான்கு பேரை பலி எடுத்த  வாதுவ பேஸ்புக் களியாட்டத்தின் ஏற்பாட்டாளர்களை பொலிசார் கைது செய்யாமல் இருப்பது இதனால்தான்... Reviewed by Madawala News on August 09, 2018 Rating: 5