முன்னணி கொள்ளையர்களாக குரங்குகளே உள்ளது... மக்கள் எங்களை சபிக்கின்றனர் .


பயிர்களை அழிப்பதற்கும் தேங்காய்க்கு அண்மைக் காலமாக தட்டுப்பாடு ஏற்பட்டதற்கும் இலங்கையின்
ஆதிக்குடிகளே பொறுப்பென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாட்டில் 35 வீதமான பயிர்கள் விலங்குகளால் அழிக்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்,

யானைகள் , மயில்கள் என்பவற்றிலும் பார்க்க முன்னணி
கொள்ளையர்களாக குரங்குகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.


தேசிய நிலையான அபவிருத்தி தொலை   நோக்கு என்பதற்கான திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

பயிர்கள் பாரியளவில் நாசமாவதற்கு உடனடித் தீர்வு காண வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார்.

முதலாவது கொள்ளைக்காரராக குரங்கு உள்ளது - நாட்டில் 14 இலட்சத்துக்கும்
மேற்பட்ட குரங்குகள் உள்ளன.

தினமும் ஒரு குலை தேங்காய்களை யாவது ஓவ் வொரு குரங்குகளும் நாசமாக்குகின்றது.

பயிர்கள் அழியும் போது விலை அதிகரிக்கின்றது. மக்கள் எங்களை சபிக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

அதே வேளை உயிர் பலியெடுக்கும் மனித- யானை யுத்தத்திற்கு அவசரத் தீர்வு தேவைப்படுகிறது எனவும் அவர்களினார்,

காட்டு யானையால் கொல்லப்பட்ட தனது தந்தையின் சடலத்தின்  அருகே 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் முழந்தால் இட்டு வணங்கிய படத்தை பத்திரிகையொன்றில் தான் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

யானை யொன்றினால் தாக்கப்பட்ட மற்றொரு தாயும் மகளும் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்காக மகனை அழைத்துச் சென்றபோது அவர்கள் இருவரும் தாக்கப்பட்டார்கள் எனக் கூறிய
ஜனாதிபதி, மனிதர்களுக்கும் யானைக்கும் இடையிலான மோதலுக்கு நிலையான தீர்வைக் காண்பது அவசியம் எனக் கூறினார்.

நாட்டில் போஷாக்கின்மை பாரிய பிரச்சி னையாக உள்ளது.

3 வயதுக்குட்பட்ட 15 % பிள்ளைகள் போஷாக்கின்மையால் பாதிக் கப்பட்டுள்ளனர். 5 வயதுக்குக் குறைந்த 17 * பிள்ளைகள் வளர்ச்சி குன்றி காணப்படு கின்றனர், பிறந்த குழந்தைகள் சுமார் 15 % எடை குறைவாக உள்ளனர். இதேவேனை நாட்டில் 45 % அதிகமான பெண்கள் எடை கூடியவர்களாகவும் அல்லது தொத்தி பெருத் தவர்களாகவும் உள்ளனர் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்திருக்கின்றார்.

முன்னணி கொள்ளையர்களாக குரங்குகளே உள்ளது... மக்கள் எங்களை சபிக்கின்றனர் .  முன்னணி  கொள்ளையர்களாக குரங்குகளே உள்ளது... மக்கள் எங்களை சபிக்கின்றனர் . Reviewed by Madawala News on August 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.