இலங்கையில் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பித்தது.


(லியோ நிரோஷ தர்ஷன்)
சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பித்துள்ளது.
இதற்காக விஷேட பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின்  ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறை பரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக முடக்கப்பட்டது. இதன் மூலம் வன்முறைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.

குறித்த  சம்பவத்தின் பின்னரே இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சமூக வலைத்தளங்கள் ஊடான பயங்கரவாதம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்து கண்காணிப்பதற்காக இராணுவம் விஷேட பிரிவினை ஸ்தாபித்துள்ளது.

இம் மாதம் இறுதியில் இடம்பெறவுள்ள பாதுகாப்பு செயலமர்வில் சமூக ஊடகம் மற்றும் நம்பகதன்மை என்ற தலைப்பில் கீழ் விசேட ஆய்வினை மேற்கொள்ள உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பித்தது. இலங்கையில் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பித்தது. Reviewed by Madawala News on August 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.