அமைச்சராக இருந்து விறகு துண்டையோ, தேக்கு மரக் கட்டையோ எதையும் வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
வனஜீவராசிகள் அமைச்சராக இருந்து கொண்டு காட்டில் உள்ள விறகு துண்டையோ ,
தேக்கு மரக் கட்டையோ ஒரு துண்டையேனும் வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை எல்லாம் மக்களுடைய சொத்து மக்களுக்காகவே இந்த அமைச்சை செயற்படுத்தி வருகிறேன் என நேற்று ஞாயிற்றுக் கிழமை (19) திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற காட்டு யானைகள்,  மனிதன் முரண்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கூறினார்.


இக் கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பாராளூமன்ற உறுப்பினரும் , தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹரூப், துரைரட்ணசிங்கம், அமைச்சின் செயலாளர் ஏ.பீ.ஜீ.ஹித்சிறி, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா,உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள்,பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயரதிகாரிகள், முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்
வனஜீவராசிகள் சட்டத்தின் பிரகாரமே உள்ளது.
 சட்ட முறைமைக்கு ஏற்பவே நாங்கள் செயற்படுகிறோம்.

அதே போன்று ஏனைய அரச அதிகாரிகளும் செயற்பட வேண்டும்.
 யானை மனிதன் முரண்பாடுகள் என்று கூறுகிறோம் . காட்டு யானை பிரச்சினையால் மனிதனின் உயிர் அழிக்கப்படுகிறது.

காட்டு யானைகளை பாதுகாப்பது தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும்.
இருந்தாலும் மனிதனதூ உயிரே முக்கியமானது.
இதற்கான வெற்றி முறையிலான தீர்வுகளை காணவேண்டும். யானையும் பாதுகாக்கப்படவேண்டும் மனிதனது உயிர்களும் பாதுகாக்கப்படவேண்டும்.
வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு நிறைய வளங்கள் தேவைப் படுகிறது. ஆளணிப் பற்றாக் குறைகள் காணப்படுகிறது.

இதற்கான வளங்களை எதிர் காலத்தில் ஜனாதிபதியுடன் சேர்ந்து அபிவிருத்திக்கு இட்டுச் செல்லவுள்ளேன்.

ஒரு வருட காலத்துக்குள் அமைச்சை பொறுப்பேற்றதன் பிற்பாடு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளேன். மேலும் வலுவடையச் செய்ய வேண்டும்.

யானைப் பிரச்சினைக்கான தீர்வு யானை வேலியே இங்கு பலரும் பல தீர்வுகளை முன்வைத்துள்ளீர்கள்.

 தற்போது இருக்கும் யானை வேலிகள் பொறுத்தமற்று காணப்படுகிறது.

நவீன வகையான யானை வேலிகளை அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.

மொத்தமாக 4500 கிலோ மீற்றருக்கான யானை வேலிகள் தேசிய மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2500 கிலோ மீற்றர் யானை வேலிகள் அமைக்கப்படவுள்ளது.

யானை வேலிகளை பராமரிக்க ஆளணிப் பற்றாக்குறை உள்ளது .

தற்போது சிவில் பாதுகாப்பு படையினரின் உதவியுடனே பாதுகாக்கப்படுகிறது. விரைவில் 3000 பாதுகாப்பு உதவியாளர்களை இணைக்கவுள்ளோம் இதற்கான அமைச்சரவை பத்திரம் அனுமதிக்கப்பட்டு வருகிறது இவர்களுக்கான சம்பளம், உணவுக்கான மானியங்கள் போன்றனவூம் வழங்க வேண்டியுள்ளது.

இதே போன்று 3000 சிவில் பாதுகாப்பு படையினர்களும் புதிதாக இணைக்கவுள்ளோம்.

இரானுவத் தளபதியாக இருந்த காலத்தில் அரசாங்கம் எனக்கு வளங்களை வழங்கியது.

நான்கு வருடத்தினுள் 80 ஆயிரம் படையினர்களை சேவைக்கு இணைத்துக் கொண்டதால் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வரமுடிந்தது. வளங்கள் தான் முக்கியம் பெறுகிறது.

வனஜீவராசி திணைக்களத்திற்கு பணம் இருக்கிறது திறைசேரியை நம்பி இருக்க வேண்டியதில்லை உள்ள பணத்தைக் கொண்டு வனஜீவராசிக்கான திணைக்களத்தை கொண்டு செல்ல முடியும்.

அரசாங்கத்தினால் மக்களுக்காக யானைத் தாக்குதலினால் உயிரழந்தோர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படல் வேண்டும் அதனால் ஒரு இலட்சம் ஐந்து இலட்சமாக அதிகரிக்கப்படவேண்டும், ஐம்பது ஆயிரம் ரூபா இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்படல் வேண்டும்.

திருகோணமலையை பொறுத்தமட்டில் மான் இனங்கள் காணப்படுகிறது இது பாதுகாக்கப்பட வேண்டும்.

100 மான்கள் தற்போது உள்ளதாக தெரிவித்தனர்.இதற்கான தனியான மான் இனத்தை பாதுகாக்கும் நோக்கில் பாதுகாப்பு பிரதேசங்கள் அமைக்கப்படவுள்ளது.

அந்த பகுதியில் மனிதர்கள் குடியிருக்க முடியாது .
அடுத்து காடுகளில் உள்ள தேன் வதைகள் காணப்படுகிறது அதுவும் பாதுகாக்கப்பட  வேண்டும்.
 நிபுணத்துவம் பெற்றவர்கள் இன்மை காரணமாக தேன் வதைகள் அழிவடைகின்றன. இது போன்று இங்கு சுற்றுலாத் தளங்கள், கடல் வளங்கள் காணப்படுகிறது அதிலுள்ள வனஜீவராசிக்கான இடங்களை பாதுகாக்க வேண்டும்.

என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மேலும் தனது உரையின் போது தெரிவித்தார்.

அமைச்சராக இருந்து விறகு துண்டையோ, தேக்கு மரக் கட்டையோ எதையும் வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. அமைச்சராக இருந்து விறகு துண்டையோ, தேக்கு மரக் கட்டையோ எதையும் வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.