பல இடங்களில் மழை... வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட இன்றைய காலநிலை விபரம்.


நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படுமென
எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைப் பிரதேசங்களிலும் மற்றும் தென் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


பல இடங்களில் மழை... வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட இன்றைய காலநிலை விபரம். பல இடங்களில் மழை... வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட இன்றைய காலநிலை விபரம். Reviewed by Madawala News on August 10, 2018 Rating: 5