நல்­லி­ணக்கம் என்ற பெயரில் அர­சாங்­கத்தை வைத்துக் கொண்டு பெளத்த மதத்தை அழிப்­ப­தற்கு சிலர் முயற்­சி­



நல்­லி­ணக்கம் என்ற பெயரில் அர­சாங்­கத்தை வைத்துக் கொண்டு பெளத்த மதத்தை அழிப்­ப­தற்கு ஒரு சிலர் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். ஆகவே நாட்டில் பெளத்த தர்­மத்தை பாது­காக்க அர­சாங்கம் முன்­னின்று செயற்­பட வேண்டும் ஜாதிக ஹெல உறு­ம­யவின்  முன்னாள் தலைவர் ஒமல்பே சோபித தேரர் குறிப்­பிட்டார்.

புத்தர் சிலை வைப்­ப­தற்கு வடக்கில் இடம் இல்லை. கிழக்­கிலும் பிரச்­சினை உள்­ளது. ஆனால் தற்­போது மேல் மாகா­ணத்­திலும் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. 

இது­வரை காலமும் கொழும்பு மாந­கர சபையில் இருந்த புத்தர் சிலையை தற்­போ­தைய மேயர் அகற்­றி­யுள்­ள­தாக ஜாதிக ஹெல உறு­ம­யவின்  முன்னாள் தலைவர் ஒமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்­தினார்.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் 9 ஆவது சரத்தில் பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­துடன் பாது­காப்போம் என கூறப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த ஷரத்தில் எமக்கு தெளி­வில்­லாத நிலைமை உள்­ளது. இந்த விடயம் தொடர்­பாக அப்­போதே முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­த­ன­விடம் பிக்­கு­க­ளினால் வின­வப்­பட்­டது. எனினும் அதற்கு இன்னும் பதில் கிடைக்­க­வில்லை.

அர­சி­ய­ல­மைப்பின் 9 ஆவது ஷரத்தின் நோக்கம் விகா­ரை­களை புன­ர­மைப்­பதும் அற­நெறி பாட­சா­லை­களை நிர்­மா­ணிப்­ப­துடன் மாத்­திரம் மட்­டுப்­ப­டுமா? அல்­லது பெளத்த கொள்கை பாது­காப்­பட்டு தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்­லப்­ப­டுமா? என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது. இந்த கேள்­விக்கு இன்னும் கூட பதி­லில்லை.

தற்­போது நாட்டில் 9176 விகா­ரைகள் உள்­ளன. எனினும் 23 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான மது­பான வியா­பார நிலை­யங்கள் உள்­ளன. இதுவே எமது நாட்டின் நிலை­மை­யாக உள்­ளது.

பெளத்த கொள்­கையை நாம் பாது­காக்க வேண்டும். விகா­ரை­களை பாது­காக்க வேண்டும். அப்­ப­டி­யாயின் அர­சாங்­கமும் மகா­சங்­கத்­தி­ன­ருமே இது தொடர்பில் அவ­தானம் செலுத்த வேண்டும்.

பெளத்த மத கொள்­கைக்கு எதி­ராக செயற்­ப­டு­வோரை தடுப்­ப­தற்­கான எந்­த­வொரு தீர்வும் இன்னும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. இந்த நாட்டில் பெளத்­தர்கள் அப்­பா­வி­க­ளாக மாறி­விட்­டனர்.

தேசிய நல்­லி­ணக்க மற்றும் ஒரு­மைப்­பாடு தொடர்­பான செய­லணி மூலம் தேசிய நல்­லி­ணக்­கத்­தினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக நாட­கங்கள் உரு­வாக்­கப்­பட்டு இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டு­தா­ப­னத்தின் மூலம் ஒலி­ப­ரப்­பி­யுள்­ளனர். இந்த நாட­கத்தின் பெயர் முழு­மை­யாக பெளத்த மதத்­தினை இழி­வு­ப­டுத்தக் கூடி­ய­தாக அமைந்­துள்­ளது. தெறுவன் சரணய் என்­ப­தற்கு தருவன் சரணய் என்று பெய­ரிட்­டுள்­ளனர். இது போன்று நாட­கங்­களின் பெயர்­களில் அர்த்­தங்கள் மாற்­றப்­பட்­டுள்­ளன. எனினும் இதனை அர­சாங்­கத்தின் அவ­தா­னத்­திற்கு கொண்டு வந்த பின்னர் அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தலை­யிட்டு அந்த நாடக அர­கேற்­றத்தை தடை செய்தார்.

எனவே நல்­லி­ணக்கம் என்ற பெயரில் அர­சாங்­கத்தை வைத்துக் கொண்டு பெளத்த மதத்தை அழிப்­ப­தற்கு முயற்­சித்து செய்து வரு­கின்­றனர். புத்தர் சிலை வைப்­ப­தற்கு வடக்கில் இடம் இல்லை. கிழக்­கிலும் பிரச்­சினை உள்­ளது. ஆனால் தற்­போது மேல் மாகா­ணத்­திலும் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை காலம் கொழும்பு மாந­கர சபையில் இருந்த புத்தர் சிலையை தற்­போ­தைய மேயர் அகற்­றி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. கொழும்பு மேய­ராக அந்­நிய மதத்­த­வர்கள் பலர் இருந்­துள்­ளனர். எனினும் எவரும் புத்த சிலையை நீக்­க­வில்லை.

பெளத்த மதத்தை பின்­பற்­றா­விடின் பிரச்­சினை இல்லை. ஆனால் பெளத்த தர்­மத்தை அழிக்கும் நோக்கில் செயற்­பட வேண்டாம். தற்­போ­தைய கொழும்பு மேய­ருக்கு பெளத்த மதத்தின் மீது விருப்பம் இல்லை என்றே எனக்கு தோன்­று­கின்­றது. எனவே பெளத்த தர்மத்திற்கான எதிராக செயற்படுவோர் விடயத்திலும் பெளத்த கொள்கைகளை பாதுகாக்கும் விடயத்தில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.

மேலும் நாடுபூராகவும் தற்போது டியூசன் மாபியா ஒன்று உள்ளது. இதன் விபரீதம் அதிகமாக உள்ளது. அறநெறி பாடசாலை நடவடிக்கைகளுக்கு டியூசன் பெரும் தடையாக உள்ளது. இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

வஜி­ர­ராம அற­நெறி பாட­சா­லையின் நூற்­றாண்டு விழா நேற்று கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ப­டத்தில் இடம்­பெற்­றது. 

இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­த மர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கலந்து கொண்­டி­ருந்­தனர். 

அத்­துடன் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும்  கலந்து கொண்­டி­ருந்­தனர். இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தமை குறிப்பிடத்தக்கது.

நல்­லி­ணக்கம் என்ற பெயரில் அர­சாங்­கத்தை வைத்துக் கொண்டு பெளத்த மதத்தை அழிப்­ப­தற்கு சிலர் முயற்­சி­ நல்­லி­ணக்கம் என்ற பெயரில் அர­சாங்­கத்தை வைத்துக் கொண்டு பெளத்த மதத்தை அழிப்­ப­தற்கு சிலர் முயற்­சி­ Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.