இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று நாயகர்களின் வரிசையில் தடம்பதிக்கிறார் ராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ்.


இலங்கை அரசியலில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மகத்தான பணிபுரிந்த வரலாற்று
நாயகர்களில் மறைந்த மூத்த தலைவர்களான மர்ஹூம் சித்தி லெப்பை, மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத், மர்ஹூம் டீபி ஜாயா, மர்ஹூம் MHM அஷ்ரப் வரிசையில் வரலாற்று தடம்பதிக்கிறார் ராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ்.

ஆயிரக் கணக்கான அரசியல் வாதிகளுக்குள்  “மிக தூரநோக்கான” சிந்தனையில் சமூகத்திற்கான விடிவெள்ளிகளாக மிளிர்ந்தவர்கள் ஒரு சிலரே!

எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் நிலமைகள் எப்படியும் ஆகலாம், எதுவும் நடக்கலாம் என்ற ஆயிரம் ஐயப்பாடுகளுக்குள்ளும் ஒரு ஒரு சமூகம் தலைநிமிர்ந்து தைரியமாக, கண்ணியமாக வாழக்கூடிய, வழிகாட்டக்கூடிய உன்னதமான ஒரு வரலாற்று பணியை செய்திருக்கிறார் திறம்பட ஹிஸ்புல்லாஹ்!

அதுதான் இலங்கையில், பல ஏக்கர் நிலப்பரப்பில் அதி நவீன வசதிகளை கொண்டு உருவாகி வரும் “பல்கலைகழகம்”.

மட்டக்களப்பு-பொலன்னறுவை எல்லையை அண்மித்த புணாணை எனும் கிராமத்தில் பல பில்லியன் ரூபா செலவில் இந்த “கெம்பஸ்” உருவாகி வருகிறது.

தற்கால அரசியலில் சிறுபான்மை மட்டுமல்ல எந்தவொரு பெரும்பான்மை அரசியல் தலைவராலும் செய்ய முடியாத ஒரு பாரிய பணியை தனி ஒருவராக சிந்தித்து அதற்கு செயல்வடிவமும் கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு விடயத்திலும் ஒரு புதுமையை, அழகை கையாளும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கலைத்துவம் பாராட்டத்தக்கது.

எத்தனையோ இனவாத எதிர்ப்புகள், உள்ளறுப்புக்கள், காட்டிக்கொடுப்புகளுக்கு மத்தியிலும் மிக தைரியமாக நின்று இந்த பிரம்மாண்டத்தை அவர் அமைத்து வருகிறார்.

ஆயிரக் கணக்கானோர்களுக்கு அதில் வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாமல் அழியாத ஒரு நிலையான கல்வி செல்வத்தையும் எதிர்கால சந்ததிக்காக ஏற்படுத்தி இருக்கிறார்.

இதுபோன்ற அவரது இன்னோரன்ன தூரநோக்கான கனவுகளும் நனவாகி நாடெல்லம் புகழ்வீச, நல்லெழில் ஓங்க எல்லாம் வல்ல அல்லாஹ் பேரருள் புரியட்டும்.
-அல்மஷூரா மடவளை நியூஸ் -















இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று நாயகர்களின் வரிசையில் தடம்பதிக்கிறார் ராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று  நாயகர்களின் வரிசையில் தடம்பதிக்கிறார் ராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ். Reviewed by Madawala News on August 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.