வேலை நிறுத்த போராட்டங்களால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.. அரசாங்கத்துக்கு பாதிப்பு இல்லை.


தம்முடைய சலுகைகளைப் போலவே இந்நாட்டின் அப்பாவி பொதுமக்களின் உரிமைகள் குறித்தும்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பணிப்புறக்கணிப்பால் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். மாறாக அரசாங்கத்துக்கு பாதிப்பு இல்லை. பொது போக்குவரத்துகளைப் போலவே, இலவச சுகாதார சேவையையும் பயன்படுத்துபவர்கள் பணக்காரர்களல்ல வசதி குறைந்தவர்கள் தான் இலவச சுகாதார சேவையைப் பயன்படுத்துகின்றனர் என்றார்.

நேற்றைய தினம் ரயில் பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பால் உயர்தரப் பரீட்சை நிறைவடைந்து வீடுகளுக்குச் செல்லக் காத்திருந்த மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், இந்நிலை மிகவும் கவலைக்குரியது.


பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள யாரும், எந்த நேரத்திலும் அரசாங்கத்துடன் கலந்துரையாடலை முன்னெடுக்க சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, கடந்த அரசாங்கத்தைப் போல எதிர்ப்பார்ப்பாட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக தற்​போதைய அரசாங்கம் எந்தவொரு நேரத்திலும் துப்பாக்கியை பயன்படுத்தவில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்த போராட்டங்களால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.. அரசாங்கத்துக்கு பாதிப்பு இல்லை. வேலை நிறுத்த போராட்டங்களால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.. அரசாங்கத்துக்கு பாதிப்பு இல்லை. Reviewed by Madawala News on August 09, 2018 Rating: 5