சட்டவிரோத ஆயுத குற்றச்சாட்டு.... முதலில் கிண்ணியாவில் அமைந்துள்ள எனது வீட்டையும் அலுவலகத்தையும் சோதனையிடுங்கள்.


முதலில் கிண்ணியாவில் அமைந்துள்ள எனது வீட்டையும் அலுவலகத்தையும் சோதனையிடுங்கள்
என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். கிண்ணியா, மூதூர் பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு கல்வியமைச்சில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

விடுதலைப்புலிகளின் காலத்தில் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட காலத்தில் கூட முஸ்லிம்கள் ஆயுதங்கள் தூக்கியது கிடையாது. யுத்தம் நிறைவடைந்த பின் “கிரிஸ் பூதம்” போன்ற பல பிரட்சினைகள் ஏற்பட்ட காலத்தில் கூட முஸ்லிம்கள் யாரும் ஆயுதம் தூக்கவில்லை. இவர்கள் கூறுவது போன்று முஸ்லிம்களுக்கு ஆயுதம் விற்பனை செய்திருந்தால் இந்த பிரட்சினைகளின் போது முஸ்லிம்கள் ஆயுதங்களை வெளியில் எடுத்திருக்க வேண்டும்.

ஆகவே இவர்கள் கூறுவதை போல் எமது பிரதேசங்களில் சட்டவிரோத ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் பாதுகாப்பு படையினர் வந்து சோதனை செய்து பார்க்கலாம். அந்த சோதனையை முதலில் எனது வீடு, அலுவலகத்திலிருந்தே ஆரம்பிக்கவும்,

ஆயுதம் எங்கு வைக்கைப்பட்டுள்ளன என்ற தகவல்கள் இவர்களிடம் உள்ளன என கூறியிருந்தனர். ஆகவே பாதுகாப்பு படையினர் முதலில் இவர்களிடமிருந்தே விசாரணைகளைஆரம்பிக்க வேண்டும். அத்துடன் ஆயுதம் தொடர்பான தகவல்கள் இவர்களிடம் இருப்பின் ஏன் அதை பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்காமல் ஊடகங்களின் முன் கூற வேண்டும்? எனவே இவர்களிடம் தனிப்பட்ட அரசியல் நிகழச்சி நிரல் ஒன்று உள்ளது இதன்மூலம் தெளிவாகிவருகிறது.

யாழ்பாணத்தில் இடம்பெற்ற மாடறுப்புக்கு எதிரான ஆர்பாட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக தமிழ் பெண்கள் நடாத்திய ஆர்பாட்டம் போன்ற தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்கும் நோக்கில் ஒரு குழுக்களால் திட்டமிட்டு நடாத்தப்படும் நிகழ்வாகவே நான் இதை கருதுகிறேன்.

எனவே அரசு இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இவர்களின் கருத்து பொய் என நிரூபிக்கப்பட்டால் அரசாங்கம் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு.
சட்டவிரோத ஆயுத குற்றச்சாட்டு.... முதலில் கிண்ணியாவில் அமைந்துள்ள எனது வீட்டையும் அலுவலகத்தையும் சோதனையிடுங்கள். சட்டவிரோத ஆயுத குற்றச்சாட்டு.... முதலில் கிண்ணியாவில் அமைந்துள்ள எனது வீட்டையும் அலுவலகத்தையும் சோதனையிடுங்கள். Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.