வெளி நாட்டவர்கள் இலங்கையை அபகரிப்பது ஏற்புடையதா?


Zafnas Zarook
வெளி நாட்டவர்கள் இலங்கையை அபகரிப்பது ஏற்புடையதா?
அன்மைக்காலமாக
பலர் தன் முக நூல்களில் நம் தலை நகருக்கு சென்றால் 'நாம் சென்றது சீனா இற்கா?அல்லதுகொழும்பிற்கா?  என்று அறிய முடியாது உள்ளதாகவும் நாட்டை சீனாவிற்கு விற்று விட்டதாகவும் ஆங்காங்கேபுலம்புவதை காணக்கூடியதாக உள்ளது. உன்மையில் இத் தன்மையானது அறியாமையை தவிர வேறொன்றும் இல்லைஎன்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு உதாரணமாக பின்வருவனவற்றை நோக்கமுடியும்.

ஆசியா கண்டத்தில் மிக துரிதமாக வளர்ந்து, இன்று வட கொரியா மற்றும் அமேரிக்கா இன் அதிபர்கள் வரலாற்றுசிறப்புமிக்க சந்திப்பு நடத்திய இடமாக உள்ள சிங்கப்பூர் ஆனது 5.1 மில்லியன் சனத்தொகையை கொண்டது.

இதில் 1.65மில்லியன் ஆனது அதாவது 39% ஆனவர்கள் அங்கு பிற நாடுகளில் இருந்து பல தேவைகளுக்காக குடியேறியவர்களே.இதன் மூலம் அங்கு நாடு பொருளாதார ரீதியிலும் ,மக்களின் உள ரீதியிலும் வளர்ந்து காணப்படுகின்றமைவெளிப்படை உன்மை.இதற்கு ஒரு சான்றே பெளத்த மதம் பிரதானமாக இருக்கும் இந்த நாட்டில் ஒரு சிறுபான்மைஇனத்தை சேர்ந்தவர் அதி உயர் பதவியை வகிப்பதாகும்.

அடுத்து இன்று சர்வதேச வர்த்தக   வர்த்தக மையமாக காணப்படும் ஐக்கிய  அரபு ராச்சியத்தை சற்று அலசுவோம்.

ஐக்கிய அரபு ராச்சியமானது 7 எமிரேட்ஸ் இனை ஒன்றினைத்து அபுதாபியினை தலை நகராக கொண்ட ஒருநாடாகும்.இதன் இன்றைய நிலை சொற்களில் வர்ணிக்க முடியாத அளவு உயர்ந்து இருக்கின்றது.


இந்த நாட்டின்சனத்தொகை 9.54 மில்லியன் ,இதில் அந்த நாட்டு மக்களின் தொகை சுமார் 0.97 மில்லியன் அண்ணளவாக 10%மாத்திரமே .மேலும் இந்த நாடு உலகின் 7ஆவது அதி கூடிய இடப்பெயர்வு உள்ள நாடாக காணப்படுகின்றது.இதனைநாம் சாதரணமாக உணர முடியும்.இந்த நாட்டில் திரும்பும் பக்கமெல்லாம் மலையாளி,பிலிபைன்ஸ் என்றேகாணப்படுவர்.எனினும் இந்த நாட்டின் இன்றைய நிலை?

அடுத்து நம் அபிமானம் வென்ற கட்டாரினை சற்று நோக்குவோம்.

கட்டாரானது 2.3 மில்லியன் மக்கள் தொகையினை கொண்டது.இதில் கட்டார் நாட்டினை சேர்ந்தவர்கள் வெறும் 12.1%ஆகும்.முதலிடத்தில் இந்தியர்களும் இரண்டாம் இடத்தில் நேபாள் மாற்றும் மூன்றாம் மற்றும் ஏழாம் இடத்தில் முறையேகட்டார் மற்றும் இலங்கை காணப்படுகின்றது.இந்த நாட்டின் இன்றைய நிலை பாரிய பொருளாதார தடைகளை அயல்நாடுகளால் எதிர் நோக்கி இருந்தாலும் இன்றைய நிலையில் அமேரிக்காவின் தாக்குதலை எதிர் நோக்கி உள்ளதுருக்கியில் 15.6 பில்லியன் டொலர்களை முதலீடு செய்து துருக்கிக்கு உதவும் நிலைக்கு முன்னேறி உள்ளது.

எனவே மேலே உள்ள விடயங்கள் ஒரு நாட்டிற்கு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவாறு வெளி நாட்டவர்கள் வருவதால் அந்தநாடு முன்னேறிய விடயங்களை காட்டுகிறது.

நம்மைப் போன்று வளர்ந்து வரும் நாடுகளுக்கு வெளி நாடுகளின் முதலீடு அத்தியவசியம் ,அதன் மூலம்பொருளாதாரம் மற்றும் உளவிருத்திகள் ஏற்படும் .

அந்த வரிசையில் சீனாவால் முன்னெடுக்கப்படும் போர்ட் சிடி திட்டமானது இலங்கையில் மற்றுமோர் 'பேர்ல் கட்டார்'உருவாக வழி அமைக்கும்.அது போல் மத்தள விமான நிலையம் உட்பட அனைத்தும் வெளி நாட்டு முதலீட்டுக்காகதிறந்து விடுதல் காலத்தின் தேவையும் கூட.

சில காலத்திற்கு முன் UAE இன் எடிசலாட் ஆனது சிவனொளி பாத மலை மற்றும் அண்டிய பகுதிகளை பொறுபெடுத்துஅபிவிருத்தி செய்ய முனைந்தது,ஆனால் காவிகளின் போராட்டத்தால் அது கைவிடப்பட்டது.அன்று அந்த போராட்டம்நடைபெற்று இருந்தால் இன்று நாம் மற்றுமொறு 'ஜபல் ஹபீட்' இனை நம் நாட்டில் கண்டிருக்க முடியும்.

எனவே நாம் இனி வரும் காலங்களில் வெளி நாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் வெளி நாட்டவர்களைஅனுமதிப்பது மற்றும் நம் நாட்டிற்கு சாதகமான வகையில் சட்ட திட்டங்களை அமுல் படுத்துவதற்கு அரசுக்கு அழுத்தம்கொடுக்க வேண்டுமே தவிர அதற்கு எதிராக செயற்படுவது நம் அறியாமையே.

''சீனாக் காரனுக்கே தொழில் கொடுத்த நாடே எம் நாடு' என்று பெருமை கொள்வோம்

Zafnas Zarook

வெளி நாட்டவர்கள் இலங்கையை அபகரிப்பது ஏற்புடையதா? வெளி நாட்டவர்கள் இலங்கையை அபகரிப்பது ஏற்புடையதா? Reviewed by Madawala News on August 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.