தேசிய அரசாங்கம் நேற்றுடன் மூன்றாண்டு ஆட்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது



நா.தினுஷா
மாகாணசபை தேர்தலை புதிய முறையில் நடத்துவதா? அல்லது பழைய முறையில்
நடத்துவதா? என்பது தொடர்பான முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதத்திற்கு பின்னர் அறிவிப்போம் என்று விளையாட்டுத்துறை அமைச்சரும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார். 
காலவதியாகியுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் எதிர்கொணடுள்ள சவால் குறித்து விளக்கமளிக்கும் போது இதனை அவர் தெரிவித்ததோடு, நாட்டில் நீதியை நிலைநாட்டுவதனூடாக மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தேசிய அரசாங்கம் வெற்றிக்கண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களிலும் அரசாங்கத்தின் குறைகளை நிவர்த்திசெய்து கொண்டு நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவோம் என்றும் முஸ்தபா சுட்டிக்காட்னார். 
அவர் மேலும் கூறியதாவது,     
"2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்த தேசிய அரசாங்கம் நேற்றுடன் மூன்றாண்டு ஆட்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இக் குறுகிய காலத்தில் நாட்டில் நீதியை நிலைநாட்டி மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் அரசாங்கம் வெற்றியினையே கண்டுள்ளது. 
இருப்பினும் தேசிய அரசாங்கத்தில் ஆட்சி நடவடிக்கைகளில் குறைபாடுகளும் காணப்படுகின்றன. அந்த குறைகளை நிவர்த்தி செய்துக் கொண்டு எதிர்வரும் காலங்களிலும் எங்களது ஆட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பணிகளை ஒன்றிணைந்த வகையில் துரிதமாக மேற்க்கொண்டு வருகின்றோம்.  அரசாங்கத்துக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட ஜனநாயக சுதந்திரங்களை ஒருபோதும் பறிக்கப்போவதில்லை.
மாகாணசபைத்தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் இரு பிரதான கட்சிகளுக்கள் மற்றும் ஏனைய சிறு கட்களுக்கிடையே நிலவும் வேறுப்பட்ட கருத்துக்களே மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் காலத்தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றன.  
இந் நிலையில் புதிய தேர்தல் முறைமைத்தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறுமென கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 
ஆகவே 24 ஆம் திகதிக்கு பின்னர் மாகாணசபைதேர்தலை புதிய முறையில் நடத்துவதா?  அல்லது பழைய முறையில் நடத்துவதா? என்பது தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் முன்வைக்குமெனவும் தேர்தலை நடத்தும் பணிகளை விரைவுப்படுத்துவதற்கான பணிகளை மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமனற்ங்கள் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது."  எனவும் தெரிவித்தார்.         
தேசிய அரசாங்கம் நேற்றுடன் மூன்றாண்டு ஆட்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது தேசிய அரசாங்கம் நேற்றுடன் மூன்றாண்டு ஆட்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது Reviewed by Madawala News on August 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.