கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ள அபிவிருத்திகள் கண்களுக்கு தெரிந்தாலும் அவை மக்களுக்கு பாரிய ஒரு பாரம்... கண்டியில் சம்பிக்க ரணவக.


 மத்தளை விமான  நிலையத்தின் வருட வருமானம் 140 இலட்சம் ரூபாய்  அதன் வருட செலவு
56,000 இலட்சம் ரூபாய் 
அமைச்சர் பாடலீ சம்பிக்க ரணவக

(மொஹொமட்  ஆஸிக்)​,

மத்தளை விமான நிலையத்தின் வருடாந்த வருமானம் 140 இலட்சம் ரூபாய் என்றும் அதன் வருடாந்த செலவு 56,000 இலட்சம் ரூபாய் என்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலீ சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டி  ஹல்ஒழுவ பிரதேசத்தில் 350 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படும் புதிய பஸ் தரிப்பிட நிலையத்தின் வேலைகளை ஆரம்பித்து வைத்த பின் இடம் பெற்ற வைபவத்தின் போதே அவர்  இதனை தெரிவித்தார்,


இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறும் தெரிவித்தார்.

இன்று நாங்கள் மக்களுக்கு தேவையான அபிவிருத்தியை மட்டுமே செய்கின்றோம். அவை மக்களுக்க பாரமாக அமையப்போவதில்லை.
எதிர் காலத்தில்  மக்களுக்கு அது பாரமாக அமையவும்போவதில்லை..


இருந்த போதும்  கடநத் காலத்தில் செய்யப்பட்டுள்ள சில அபிவிருத்திகள் கண்களுக்கு தெரிந்தாலும்  அவை மக்களுக்கு பாரிய ஒரு பாரம். கட்டுநாயக்க விமான நிலையத்திற்னு 200 விமானங்களுக்கு மட்டுமே வர முடியும் தற்போது 225 விமானங்கள் வருகின்றன.

இரண்டாவது விமான நிலையத்தை கட்டுநாயக்காவில் நிறுவி இருக்க வேண்டும் ஆனால் அதனை மத்தளை தமது ஊருக்கு கொண்டு சென்றனர்.
இன்று அதன் நிலை என்ன.


மத்தளை விமான நிலையத்தின் வருடாந்த வருமானம் 140 இலட்சம் ரூபாய் ஆகும் ஆனால் அதன் வருடாந்த செலவீனம் 56,000 இலட்சம்  ரூபாய். இதன்
வ​ரவை விட செலவு 395 வீதம் அதிகம். அரசாங்கம் மக்களிடம் இருந்து வரி அறவிடுவதாக குறை கூறினாலும் மக்களிடம் இருந்து அறவிடும் அனைத்து வரிகளும் இவ்வாரான பிரயோசனமற்ற அபிவிருத்தித் திட்டங்களு​க்கே செலவாகின்றன.


எங்களது அரசு ஊடகவியலாளர்களுக்கு மற்றும் தொழிற் சங்கங்களுக்கு மற்றுமல்லாமல் பொது மக்களுக்கும் தேவையான சுதந்திரத்தை வழங்கியது.

ஊடகவியலாளர்களுக் சுதந்திமாக எழுத முடியும். தொழிற் சங்கங்களுக்கு சுதந்திரமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்ய முடியும் வெள்ளை  வேன்கள் இப்போது வருவதில்லை. ஆனாலும் நாங்கள் வழங்கியுள்ள சுதந்திரத்தை பொருப்புடன பாவிப்பது அவர்கள் அனைவர்களினதும் கடமையாகும் என்றும் அமைச்சர் பாட்லீ சம்பிக்க ரணவக இங்கு மேலும் தெரிவித்தார்.


தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம.எச்.ஏ. ஹலீம் உற்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
கடந்த காலத்தில் செய்யப்பட்டுள்ள அபிவிருத்திகள் கண்களுக்கு தெரிந்தாலும் அவை மக்களுக்கு பாரிய ஒரு பாரம்... கண்டியில் சம்பிக்க ரணவக. கடந்த  காலத்தில் செய்யப்பட்டுள்ள  அபிவிருத்திகள் கண்களுக்கு தெரிந்தாலும்  அவை மக்களுக்கு பாரிய ஒரு பாரம்... கண்டியில் சம்பிக்க ரணவக. Reviewed by Madawala News on August 12, 2018 Rating: 5