இரத்தம் குடிக்கும் கடனட்டை .


ஒரு கிரெடிட் கார்ட் நம் கைக்கு கிடைத்துவிட்டால், வாழ்க்கையே ஜாலி தான். 

தெருவோர டீக்கடை பராட்டாவுக்கு 'வரட்டா' என்று bye சொல்லிவிட்டு, டைன்மோர் சப்மெரினுக்கு சலாம் சொல்ல சென்றுவிடலாம்.  சந்திக்கு சந்தி இருக்கும் ஹோட்டல்ஸ் எல்லாம் யூஸ்லஸ். இங்கெல்லாம் கிரெடிட் கார்டு புழக்கமில்லை. அதனால் கிரஸ்கேட், ஃபூட் கோட் என லைஃப் ஸ்டைலை மாற்ற வழிகாட்டுகிறது இந்த கார்டு.

உண்பது மட்டுமா வாழ்க்கை?  உடுப்பதும் தானே. மெக்டொனாலில சாப்பிடுகிறவன் மொக்கையன் போல உடுத்தலாமா? Shame  எக்ஸிபென்ஸிவான மொடர்ன் ட்ரஸ், சூஸ், பர்ஸ், ஃபர்ப்யூம்... இதெல்லாம் அணிவதை சாத்தியமாக்குகிறது இந்த கடனட்டை. 

ஒவ்வொரு மாதமும்  நீங்கள் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை முழுமையாக கட்டவும் தேவையில்லை. குறித்த தினத்திற்கு பிந்தாமல் வங்கியால் சொல்லப்படும் குறைந்தபட்ச தொகையை செலுத்தி வந்தால், நீங்கள் அந்த வங்கியின் விசுவாசமான கஸ்டமர். Great.

இப்படி செலுத்தும் இந்த தொகையில் கொஞ்சம் இன்ட்ரஸ்ட்டும் கலந்திருக்கும். It's nothing to worry about it man.

Default எனும் தப்பை புரியாமல் ஒழுங்காக செலுத்த வேண்டியதை செலுத்தினால்  உங்கள் விசுவாசத்தை வங்கி நேசிக்கும். உங்களுக்கான கடன் லிமிட்டை அதிகரிக்க யோசிக்கும். சில்வர் கார்டு கோல்டாக மாறும். இனிமேல் இன்னும் அதிக தொகை கடன் வசதி உங்களுக்கு கிடைக்கும். Wow.. I love it.  இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள தொகையில் ஒரு வெளிநாட்டு பயணத்துக்கான பெகேஜை கூட  புக்கிங் செய்யலாம். ட்ரிப் அடித்து வந்தபிறகு மாதாமாதம் சிறுகச் சிறுக வங்கிக்கு செலுத்தினால் போதும்.

மனித வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமல்ல சங்கடங்களும் வரத்தானே செய்யும். திடீரென வீட்டில் யாருக்காவது சுகவீனம். கிரெடிட் கார்டின் கருணையால் தனியார் ஹாஸ்பிடலுக்கே செல்லலாம். இதுவரை சென்று வந்த தர்மாஸ்பத்திரி மறந்தே போய்விடும். Government hospitals are horrible. 

மெல்ல, மெல்ல மீண்டு வரமுடியாத கடன் எனும் புதை மணலில் உங்களை வங்கி ஆழ்த்தி வருவதை அறிய மாட்டீர்கள். 

மேடு, பள்ளம் நிரம்பிய வாழ்க்கையில் இப்போது பள்ளம் நோக்கியதாக உங்கள் பயணம் இருக்கும்.   வங்கி குறிப்பிடும் தினத்தில் கட்ட முடியாத அளவு நிதி நிலைமை நெருக்கடியாகும். Default செய்ய ஆரம்பிப்பீர்கள். தொடர்ந்தும் கட்ட தவறும்போது வங்கி  letter of demand அனுப்பும். உங்கள் மீது  சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படப் போவதற்கான சங்கூதல் தான் அது. 14 தினங்களுக்குள் நீங்கள் கொடுப்பனவு செய்யவில்லை என்றால்  சில வாரங்கள் கழித்து நீதிமன்றத்தில் இருந்து வழக்குக்கு வருமாறு invitation  வரும். 

இப்போது  ஷேவிங்கை காணாத  உங்கள் முகத்தில் தாடி முளைக்கும். மார்க்கம் நினைவுக்கு வரும். 
ஒரு கறுப்பு கோட்டிடம் (ஹா... ஹா.. நமக்கிட்டதான்) ஓடி வருவீர்கள். 

"சேர் பாருங்க சேர், வெரட்டி வெரட்டி வந்து கடன்காரனாக்கி இப்படி வட்டிய போட்டிருக்கிறான்"

கடனட்டைக்கான விண்ணப்பத்தில் கையொப்பம் வைக்கும்போது நிலுவையில் (amount in due) உள்ள தொகைக்கு வட்டி அறவிடப்படுமென போட்டிருந்ததே நீ பார்க்கல்லயா ராசா? இந்த கேள்விக்கு "ஞே" என்ற விழிப்புதான் உங்கள் பதிலாக இருக்கும். So ugly.

இந்த நாட்டு நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்கும் நீதிமன்றமானது உங்கள் வழக்கையெல்லாம் மனிதாபிமானத்துடன் அணுகும் என எதிர்பார்த்தால்... hay you are crazy. 

"ஒப்பந்தத்தில ஒப்பமிட்டியா அப்போ கட்டு" இந்த cut ஒண்ணு piece  ரெண்டு பாலிசியதான் நீதிமன்றம் கடைப்பிடிக்கும். 

வங்கியின் லோன் ரிகவரி பிரிவுக்கு சென்று அங்குள்ள ஆபிஸரிடம் நம்ம கட்சிக்காரனின் கஷ்டங்களை கூறி சலுகை காட்டுங்கள் பிரபு என வேண்டினால் ஏதோ இரக்கப்பட்டு வட்டியில் கொஞ்சம் வெட்டிவிட்டு மீதியை 24 அல்லது 36 மாத தவணைகளில் கட்ட அவகாசம் வழங்க சம்மதிப்பார் ஆபிஸர். இந்த செட்டில்மண்ட் நீதிமன்றில் பதியப்படும். பின்னர்  தொடர்ச்சியாக இரு தவணைப் பணத்தை செலுத்த தவறினால்.. very sorry. உங்கள் சொத்துக்களை பறிக்க வங்கி அனுமதிக்கப்படும். 

சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் கடனட்டையால் நானும் கடிபட்டேன். நான் பணிபுரிந்த அலுவலகம் தேடிவந்து வலை வீசி ஆள் பிடித்தான் வங்கி ஏஜெண்ட். சேகர்கள் மாட்டினார்கள் சாவதற்கு. நானும் ஆர்வக் கோளாறால் ஒரு அட்டையைப் பெற்றேன். Foolishness. 

எவ்வளவோ அவதானமாக பாவித்து அந்தந்த மாதங்களில் பட்ட கடனை நிலுவையின்றி செலுத்தினாலும் தருணங்களில் அப்படிச் செய்ய இயலாது போனது.  கடன்காரனானேன். நிலுவை தொகையும் கூடியது. மாதச் சம்பளத்தில் கடனுக்கு பணம் ஒதுக்குவது பெரும்பாடானது. கடன்பட்டான் நெஞ்சின் கலக்கம் அனுபவமானது... tragedy. 

இந்த சனியனில் இருந்து விடுதலையாக வேண்டும். 

கிடைத்த ஒரு போனஸ் தொகையை எடுத்துக் கொண்டு வங்கிக்குச் சென்றேன். எனது கடனை முற்றாக செலுத்தி தீர்க்கப் போகிறேன். எனக்கு இனிமேல் கடனட்டை தேவையில்லை என்றேன். பணத்தை செலுத்திய பின்னர், வங்கி ஆபிஸரான அந்த பெண்ணிடம் நான் ஒப்படைத்த கடனட்டையை என்ன செய்வீர்கள் எனக் கேட்டேன். அதை வெட்டி அழித்துவிடுவோம் என்றார் அந்த ஆபிஸர். அப்படியா.. அதை என் கண்களால் காணவேண்டும். இப்போதே அதை செய்யுங்கள் என்று சொல்ல, ஒரு முறை என்னை விழியுயர்த்திப்  பார்த்த அந்தப் பெண் கத்திரிக்கோலால் காதக கடனட்டையை இரு துண்டாக்கினாள். என் மனதில் அப்போது ஏற்பட்ட அந்த நிம்மதியை வர்ணிக்க முடியாது. Thanks God. 

அதன் பின்னர் இன்று வரை கடனட்டை ஒன்றை பாவிக்கும் தேவையை இறைவன் ஏற்படுத்தவில்லை. கடனட்டை பாவிப்பதில்லை என்ற உறுதியான ஒரே முடிவுதான் இதற்கு அவசியம். 

இன்னுமொரு விடயம். பாக்கி வைக்காமல் ஒவ்வொரு மாதமும் கடனை செலுத்தும் வாடிக்கையாளனையும் வங்கி விரும்புவதில்லை. இப்படி நடந்து வரும் எனது நண்பர் ஒருவருக்கு அவர் பல முறை கேட்டும் credit card limit அதிகரிக்கப்படவில்லை.  வங்கியை பொறுத்த அளவில் அவர் ஒரு bad customer. நீங்கள் எக்காலமும் வட்டி கட்டும் ஒரு விசுவாசமான வாடிக்கையாளனாக இருப்பதையே வங்கி விரும்பும்.

நீங்கள் வங்கியின் விசுவாசமான வாடிக்கையாளனாக இருக்கப் போகிறீர்களா
அல்லது,  அல்லாஹ்வின் விசுவாசமான நல்லடியானாக இருக்கப் போகிறீர்களா?
தெரிவு உங்கள் கையில். choice is yours.

Naseem Hickmath
இரத்தம் குடிக்கும் கடனட்டை . இரத்தம் குடிக்கும் கடனட்டை . Reviewed by nafees on August 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.