கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த பஸ்.. ஒருவர் உயிரிழப்பு. சிலர் காயம்.


கொழும்பில் இருந்து  கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நொதகம கங்கையில்
வீழ்ந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அம்பலன்தொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சாரதிக்கு பேருந்தினை கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ள நிலையில் கங்கையில் வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கதிர்காமம் பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 30  வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த பஸ்.. ஒருவர் உயிரிழப்பு. சிலர் காயம்.  கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்த பஸ்.. ஒருவர் உயிரிழப்பு. சிலர் காயம். Reviewed by Madawala News on August 09, 2018 Rating: 5