தயிர் வடைக்குள் பீடி, ஹோட்டல் காலவரையின்றி பூட்டு. #கிண்னியா புஹாரியடி சந்தி


-ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா பிரதான வீதியில் உள்ள புஹாரியடி சந்தியில் உள்ள

 ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை (16) வாங்கிய தயிர் வடைக்குள் பீடி உள்ளதாக தயிர் வடை வாங்கிய ஒருவர் தெரிவித்தார்.


குறித்த ஹோட்டலில் எட்டு தயிர் வடைகளை வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்று மாலை நேரத் தேனீர் ஆகாரங்களுடன் உணவருந்த முற்பட்டபோது தனது மகன் கடித்த தயிர் வடைக்குள் பீடி இருந்ததாக உரிமையாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து தயிர் வடை வாங்கிய குறித்த நபர் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் உரிய வடையுடன் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டுக்கமைய சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வலைப்பில் குறித்த ஹோட்டலில் உள்ள பாவனைக்குதவாத தயிர்வடைகள் ஒரு தொகையும், ஒரு தொகை கோழி இறைச்சி பொறியல், மாசி சம்பல் ஒரு தொகையையும் கைப்பற்றியுள்ளனர்.


ஹோட்டலை உடனடியாக காலவரையறையன்றி இழுத்து மூடப்பட்டதுடன்.

ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
தயிர் வடைக்குள் பீடி, ஹோட்டல் காலவரையின்றி பூட்டு. #கிண்னியா புஹாரியடி சந்தி தயிர் வடைக்குள் பீடி, ஹோட்டல் காலவரையின்றி பூட்டு. #கிண்னியா புஹாரியடி சந்தி Reviewed by nafees on August 17, 2018 Rating: 5