கல்வி அபிவிருத்தி திட்டத்துக்கு வைத்தியர் சங்கம் நிதி உதவி.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக்கோட்டப் பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண
தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான செயற்திட்டத்தின் பிரகாரம் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கான விசேட வகுப்புக்கள் தற்போது கல்குடாப் பகுதிகளில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.


அந்தவகையில் மாணவர்களின் இவ்விஷேட கற்றல் வகுப்புக்களின் செலவீனங்களை நிவர்த்திசெய்து மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு பிரதேசத்திலுள்ள பலரும் நிதியுதவிகளை வழங்கியிருந்தனர் அதன் தொடரில் கல்குடா வைத்தியர் சங்கம் இத்தேவையினை உணர்ந்து குறித்த கல்வித் திட்டத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவியினை வழங்கியுள்ளது.

அத்தோடு பிரதேசத்திலுள்ள சட்டத்தரணிகள், அரச ஊழியர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் போன்றோர்கள் குறித்த திட்டத்துக்கு தங்களுடைய பங்களிப்புக்களை வழங்கியுள்ளதோடு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் நிதியுதவியினை வழங்கி வைத்துள்ளார்.


குறித்த திட்டத்துக்கு நிதியுதவி வழங்கி வைக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அஹ்சாப் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான், வைத்திய அதிகாரி எச்.எம்.முஸ்தபா, ஆசிரியர் எம்.எம்.உவைஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அபிவிருத்தி திட்டத்துக்கு வைத்தியர் சங்கம் நிதி உதவி. கல்வி அபிவிருத்தி திட்டத்துக்கு வைத்தியர் சங்கம் நிதி உதவி. Reviewed by Madawala News on August 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.