ஞானசார தேரர் இந்த நாட்டின் தேசிய சொத்து, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் ..ஞானசார தேரர் இந்த நாட்டின் தேசிய சொத்து, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு
வழங்கப்பட வேண்டும் என மாகல்கந்தே சுதந்த தேரர் குறிப்பிட்டார்.

நேற்று பொதுபல சேனா காரியாளயத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளோம்
ஞானசார தேரர் சிறைச் சோறு சாப்பிட வேண்டிய ஒருவர் அல்லவெனவும், அவர் நாடு, இனம் , மதம் என்பவற்றை முன்னிருத்தி போராடும் ஒரு தேரர்.
வாய்ப் பேச்சாக விடுக்கப்படும் இக்கோரிக்கை, அடுத்து வரும் நாட்களில் எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் விடுக்கப்படும் எனவும் தேரர் கூறினார். ஜனாதிபதி இதற்கு நியாயமான ஒரு தீர்வைப் பெற்றுத் தருவார் என்பது மகாநாயக்கர்களின் எதிர்பார்ப்பு எனவும் சுதந்த தேரர் குறிப்பிட்டார்.
ஞானசார தேரர் இந்த நாட்டின் தேசிய சொத்து, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் .. ஞானசார தேரர் இந்த நாட்டின் தேசிய சொத்து, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் .. Reviewed by Madawala News on August 10, 2018 Rating: 5