பௌத்த மதத்தை பாதுகாத்து முன்கொண்டு செல்வோம்... ரோஸி சேனா­நா­யக்க புத்தர் சிலையை அகற்றவில்லை. புகைப்­ப­டத்­தையும் எனக்கு பேஸ்புக்கில் அனுப்பி உள்ளார்.


(எம்.எம்.மின்ஹாஜ்)
கொழும்பு மாந­கர சபையில் இருந்த புத்தர் சிலையை மேயர் ரோஸி சேனா­நா­யக்க நீக்­க­வில்லை.
ஒமல்பே சோபித தேரரின் கருத்து தொடர்பில் உடன் மேய­ருக்­குக்கு தொலை­பேசி மூலம்  அழைத்து விசா­ரித்தேன். புத்தர் சிலையை நீக்­க­வில்லை என்றே கூறினார். பேஸ்புக் மூலம் புத்தர் சிலை இருப்­ப­தாக உறு­திப்­ப­டுத்தி புகைப்­ப­டத்­தையும் தனக்கு அனுப்பி வைத்தார்.


ஆகவே பெளத்த மதத்தை பல­வீ­னப்­ப­டுத்தாமல் நவீன தொழில்­நுட்ப யுகத்­திலும் பெளத்த தர்­மத்தை பாது­காத்து முன்­கொண்டு செல்வோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒமல்பே சோபித தேரருக்கு பதி­ல­ளித்தார்.

அத்­துடன் பெளத்த அற­நெ­றியை தனியார் வகுப்­பு­களின் மூலமோ பாட­சாலை பாட­வி­தா­னங்­களின் மூலமோ பூர­ண­மாக கற்க முடி­யாது. ஆகவே தனியார் வகுப்பு தொடர்பில் நாம் அவ­தானம் செலுத்­துவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

வஜி­ர­ராம அற­நெறி பாட­சா­லையின் நூற்­றாண்டு விழா நேற்று கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ப­டத்தில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கலந்து கொண்­டி­ருந்­தனர். அத்­துடன் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

வஜி­ர­ராம தேரர் பெளத்த தர்­மத்­துடன் சம்­பந்­தப்­பட்ட புத்­த­கங்கள், பாளி மொழி புத்­த­கங்கள் 2000 அளவில் வஜி­ர­ராம நூல­கத்­திற்கு அன்­ப­ளிப்பு செய்தார். வஜி­ர­ராம அற­நெறி பாட­சா­லையை நாட்டின் வள­மாக கருத முடியும். எனக்கும் குறித்த அற­நெறி பாட­சா­லை­யுடன் தொடர்­புள்­ளது. என்­னு­டைய தாயார் பெலனி வஜி­ர­ராம தேர­ரி­டமே பெளத்­தத்தை கற்­றுக்­கொண்டார். ஹெலேனா விஜே­வர்­தன தனது பேரர்­களை அழைத்து சென்று பெலனி வஜி­ர­ராம தேர­ரிடம் பெளத்த மதத்தை கற்­றுக்­கொ­டுக்க வழி­வ­குத்தார். நானும் இங்கு பெளத்த தர்­மத்தை கற்­றுள்ளேன்.

என்­னு­டைய சிங்­கள மற்றும் ஆங்­கில மொழி எழுத்து சீராக இல்­லாத கார­ணத்­தினால் மகா­நாம தேர­ரிடம் சென்று சிங்­கள எழுத்­து­களை கற்­றுக்­கொண்டேன். ரோயல் கல்­லூரி மிச­னரி பாட­சாலை இல்லை. எனினும் பெளத்த மதம் பாட­வி­தா­ன­மாக இருந்­தது. என்­றாலும் பெளத்த மதத்­திற்­கான பூரண அறி­வினை நான் அற­நெறி பாட­சா­லையின் ஊடா­கவே கற்றேன்.

ஆகவே தற்­போது பெளத்தம் உட்­பட ஏனைய மத பாட­வி­தா­னங்கள் தற்­போது பரீட்­சையில் இணைக்­கப்­பட்டு பாட­சா­லை­களில் கற்­பிக்­கப்­பட்­டாலும் பெளத்த அற­நெ­றியை முழு­மை­யாக பாட­சா­லை­களில் கற்க முடி­யாது. அது­மாத்­தி­ர­மின்றி தற்­போது தனியார் வகுப்­பு­களில் பெளத்த மதம் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது. பெளத்த மதத்தை அறி­நெறி பாட­சா­லை­களின் ஊடா­கவே முழு­மை­யாக கற்க முடியும் என்­பதே எனது கருத்­தாகும். ஆகவே தனியார் வகுப்பு தொடர்பில் நாம் அவ­தானம் செலுத்­துவோம்.

உலகம் கைத்­தொழில் புரட்சி போன்­ற­வற்­றினால் மாற்றம் கண்ட போது வஜி­ர­ராம தேரர் போன்றோர் பெளத்த மதத்தை வளர்த்தனர். ஆகவே அது­போ­லவே நவீன தொழில்­நுட்ப யுகத்­திற்கு ஏற்ற வகையில் நாமும் மாற்றம் காண வேண்டும்.

அத்­துடன் கொழும்பு மாந­கர சபையில் இருந்த புத்தர் சிலையை மேயர் ரோஸி சேனா­நா­யக்க நீக்­கி­ய­தாக ஒமல்பே சோபித தேரர் இந்த மேடையில் குற்றம் சுமத்­தினார். எனினும் இது தொடர்­பாக உடன் ரோஸி சேனா­நா­யக்­க­வுக்கு நவீன தொழில்­நுட்ப உப­க­ர­ண­மான தொலை­பேசி மூலம் அழைத்து விசா­ரித்தேன். இதன்­போது அவர் புத்தர் சிலையை நீக்­க­வில்லை என்றும் அந்த இடத்­தி­லேயே அது உள்ளதாக கூறினார். பேஸ்புக் மூலம் புத்தர் சிலை இருப்பதாக உறுதிப்படுத்தி புகைப்படத்தையும் தனக்கு அனுப்பி வைத்தார். ஆகவே பெளத்த மதத்தை பலவீனப்படுத்த நாம் முனைய மாட்டோம். நவீன தொழில்நுட்ப யுகத்திலும் பெளத்த தர்மத்தை பாதுகாத்து முன்கொண்டு செல்வோம் என்றார்.
பௌத்த மதத்தை பாதுகாத்து முன்கொண்டு செல்வோம்... ரோஸி சேனா­நா­யக்க புத்தர் சிலையை அகற்றவில்லை. புகைப்­ப­டத்­தையும் எனக்கு பேஸ்புக்கில் அனுப்பி உள்ளார். பௌத்த மதத்தை பாதுகாத்து முன்கொண்டு செல்வோம்... ரோஸி சேனா­நா­யக்க புத்தர் சிலையை அகற்றவில்லை.  புகைப்­ப­டத்­தையும் எனக்கு  பேஸ்புக்கில் அனுப்பி உள்ளார். Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.