அகவை 66 இல் இன்று காலடி வைக்கும் ஆஜானுபாகுவான மனிதர் ஹனீபா மதனி!


- ஏ.எச்.சித்தீக் காரியப்பர் - 
ஹனீபா மதனி அவர்களுக்கு  இன்று (20)  அகவை 66. தோற்றத்துடன் ஒப்பிடுகையில் நம்ப முடியாத வயது.
வெள்ளையான தோற்றம். எப்போதும் வெள்ளை உடையுன் காட்சி தரும் ஆஜானுபாகுவான மனிதர். உள்ளம், உடை போன்றே  இவரின்  மனதும் வெள்ளைதான்.

இவரிடம் நான் கண்ட உயர்ந்த பண்பு பொறுப்புக் கூறல் என்ற விடயம். எந்த அரசாங்கங்களிடமும் இல்லாத இந்தத் தன்மை தனிமனிதரான ஹனீபா மதனி  அவர்களிடம் நிறைந்து காணப்படுகிறது.

ஒருவர் விடயத்தைப் பொறுப்பேற்றால் அல்லது அவராகவே நினைத்து ஒரு விடயத்தை முன்னெடுத்தால் அதனைச் சரியாகவும் நேர்த்தியாகவும்  செய்து முடிக்காமல் ஓய்ந்த விடமாட்டார். இது அவரது இரத்தத்தில் ஊறிப்போன மாமூலான விடயம். மிகத் துணிச்சலான மனிதர். அதனைக் கடந்த காலங்களில் செய்தும் காட்டியுள்ளார்.

நான்  இவருடன் சில அரசியல்  விடயங்களில்  முரண்பாடுகளுக்கு இடையில் உடன்பாடுகள் காண்பவன் என்பதற்கும் இவைகளே காரணமாகியுள்ளன.

அவரது ஆயுளை இறைவன் நீடித்து தான் சார்ந்த சமூகத்துக்கு மேலும் சேவைகளைச் செய்ய  வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
அகவை 66 இல் இன்று காலடி வைக்கும் ஆஜானுபாகுவான மனிதர் ஹனீபா மதனி! அகவை 66 இல்  இன்று காலடி வைக்கும் ஆஜானுபாகுவான மனிதர் ஹனீபா மதனி! Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.