மஹிந்­தவின் குடும்ப ஆட்­சி­யை மீண்டும் மக்கள் உரு­வாக்­க­ மாட்­டார்கள். தேர்தலில் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு நூற்றுக்கு 39 வீதவாக்­குகளே கிடைத்­தன.


உள்­ளூ­ராட்சி தேர்­தலின் பெறு­பே­றுகள் மஹிந்­தவின் சுய­ரூ­பத்தை மீண்டும் வெளிப்­ப­டுத்­தி­ன. அதாவது
பொது­ஜன பெர­மு­ன­வுக்கு நூற்றுக்கு 39 வீதவாக்­குகள் கிடைத்­தன. உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின்   முக்­கிய பொறுப்­புக்கள் அனைத்­திலும் ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­னரே நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அவர்­க­ளுக்கு அடுத்து பத­வியில் இருந்த ஏனைய தலை­வர்கள் அவர்­க­ளு­டைய அடி­மை­க­ளா­கவே காணப்­பட்­டனர். அதே­போன்று ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் தங்­க­ளு­டைய குடும்­பத்­தி­னரின் உடலில் மாத்­தி­ரமே இரத்தம் ஓடு­வ­தா­கவும் ஏனை­ய­வர்­களின் உடலில் சேறு ஓடு­வ­தா­கவும் நினைத்துக் கொண்­டி­ரு­கின்­றனர் என்று பாரிய நகர அபி­வி­ருத்தி மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக ரண­வக்க தெரி­வித்தார்.

கண்டி தல­தா­மா­ளி­கையி்ல் நேற்று இடம் பெற்ற சமய நிகழ்­வு­களின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்

உண்­மையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கோ அல்­லது அவ­ரது சகோ­த­ரர்­க­ளான கோத்­த­பாய ராஜ­பக்ஷ மற்றும் பஷில்­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கோ அவர்­க­ளது ஆட்சி காலத்தில் நாட்டில் இலாபம் ஈட்­டக்­கூ­டிய அரச நிறு­வனம் ஒன்­றை­யேனும் உரு­வாக்­கி­னார்கள் என ஏதா­வ­தொரு நிறு­வ­னத்தை பெயரை குறிப்­பிட்டுக் கூற முடி­யுமா?

அரச பணம் அல்­லது வெளி­நாட்டு வரு­மா­னத்தை எவ்­வாறு செலவு செய்­வது என்­பதை மாத்­தி­ரமே அவர்கள் தெரிந்து வைத்­தி­ருந்­த­னரே தவிர இலா­மீட்­டு­வ­தற்­கான எந்த முறை­யையும் அறிந்து வைத்­தி­ருக்­க­வில்லை.

ராஜ­ப­க்ஷவின் முகா­மைத்­துவ திற­னுக்­கான சிறந்த உதா­ர­ணங்­க­ளாக அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் மத்­தள விமான நிலையம் ஆகி­ய­வற்றை குறிப்­பி­டலாம். மத்­தள விமான நிலையம் தேசிய சொத்து எனக் அதைப் பற்றி அதி­க­மாக பேசு­கின்­றனர். மத்­தள விமான நிலை­யத்தின் மூல­மான வரு­மா­னத்தை விட செலவு பன்­ம­டங்கு அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. இது தான் ராஜ­ப­க்ஷக்­க­ளு­டைய பொரு­ளா­தார முகா­மைத்­துவம்.

சிறந்த அர­சியல் அறி­வு­டைய மக்கள் மீண்டும் அவ்­வா­றா­ன­தொரு குடும்ப ஆட்­சியை மீண்டும் உரு­வாக்க மாட்­டார்கள். அவர்­க­ளுக்கு சார்­பாக செயற்­படும் சில அடி­மைகள் மாத்­தி­ரமே அதனை உரு­வாக்க எண்­ணு­வார்கள். எமது அர­சாங்­கத்தில் சிறு சிறு குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. எவ்­வா­றி­ருப்­பினும் அவற்றை திருத்­தி­ய­மைத்து கடன் சுமை­யி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுத்து முன்­னோக்கி கொண்டு செல்­வ­தோடு, அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பாரிய வெற்­றி­ய­டைவோம்.

சிங்­கப்பூர் உடன்­ப­டிக்கை மூலம் நாட்­டிற்குள் எந்­த­வித தேவை­யற்ற விட­யங்­களும் வரு­வ­தற்­கான வாய்ப்புக்களும் இல்லை. எனவே அதனை விமர்சிப்பதற்கான எந்தவொரு தேவையும் மஹிந்த தரப்பினருக்கு இல்லை. அடுத்த தேர்தலில் எமது வெற்றியை உறுதிப்படுத்துவதன் மூலம் இவ்வாறு மேற்கொள்ளப்படும் பொய் விமர்சனங்கள் மற்றும் மக்களை திசை திருப்பும் செயற்பாடுகளை நீக்கிக் கொள்ள முடியும் என்றார்.
மஹிந்­தவின் குடும்ப ஆட்­சி­யை மீண்டும் மக்கள் உரு­வாக்­க­ மாட்­டார்கள். தேர்தலில் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு நூற்றுக்கு 39 வீதவாக்­குகளே கிடைத்­தன. மஹிந்­தவின் குடும்ப ஆட்­சி­யை மீண்டும் மக்கள் உரு­வாக்­க­ மாட்­டார்கள். தேர்தலில் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு நூற்றுக்கு 39 வீதவாக்­குகளே கிடைத்­தன. Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.